சட்னி செய்றதுக்கு முன்னாடி மாதுளை பழத்தை கழுவி சுத்தம் பண்ணி, அதுல இருந்து விதைகளை தனியா எடுத்துக்கோங்க.
ஒரு மிக்ஸி ஜார்ல மாதுளை விதைகள், பச்சை மிளகாய், வெங்காயம், பூண்டு சேர்த்து நல்லா நைசா அரைச்சுக்கோங்க. சட்னிக்கு கொஞ்சமா தண்ணி சேர்த்துக்கலாம்.
அப்புறம் அதுல கொத்தமல்லி தழை, புதினா, வெங்காயம், தக்காளி, கொஞ்சமா இனிப்பு (வெல்லம் அல்லது சர்க்கரை) சேர்த்து மறுபடியும் அரைச்சுக்கோங்க.
இப்படி ரெடி பண்ண சட்னியை பிரிட்ஜ்ல வெச்சா, 4 ல இருந்து 5 நாள் வரைக்கும் கெட்டுப்போகாம இருக்கும்.
ஈஸியான வழியில சூப்பரான மாதுளை சட்னி சில நிமிஷத்துலயே ரெடி.
சட்னி கொஞ்சம் காரமா வேணும்னா, நீங்க பச்சை மிளகாய அதிகமா சேர்த்துக்கலாம். இதனால டேஸ்ட் இன்னும் சூப்பரா இருக்கும்.