Mutton Masala : வீட்டிலேயே கமகமக்கும் மட்டன் மசாலா பொடி..மணமும் சுவையும் அள்ளும் ஹோம்மேட் ரெசிபி!

Published : Nov 14, 2026, 10:13 AM IST

Mutton Masala: மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் கிரேவி என அனைத்து உணவுகளுக்கும் மணமும் சுவையும் கூட்டும் வீட்டில் தயாரிக்கும் மட்டன் மசாலா பொடி செய்வது எப்படி? தேவையான பொருட்கள், செய்முறை மற்றும் சேமிக்கும் முறையைத் தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
19
மட்டன் மசாலா பொடி

மட்டன் குழம்பு என்றாலே அதன் மணமும், மசாலாவின் சுவையும் தான் முதலில் நம் நாவில் எச்சில் ஊற வைக்கும். ஹோட்டல்களில் கிடைக்கும் மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் கிரேவி போன்ற உணவுகள் ஏன் அவ்வளவு சுவையாக இருக்கின்றன என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதற்கு முக்கியக் காரணம் அவர்கள் பயன்படுத்தும் மசாலாப் பொடிகள்தான்.

கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் மசாலாப் பொடிகளை வாங்குவதற்குப் பதிலாக, வீட்டிலேயே நறுமணம் மாறாமல் தரமான பொருட்களைக் கொண்டு மட்டன் மசாலா பொடியைத் தயாரிக்கலாம்.

மல்லி, மிளகு, சீரகம், சோம்பு எனப் பல்வேறு நறுமணப் பொருட்களுடன் முந்திரி, கடலைப்பருப்பு உள்ளிட்ட பொருட்களையும் சேர்த்து அரைக்கும்போது கிடைக்கும் சுவையே தனி.ஒருமுறை இந்த மசாலாவைத் தயாரித்து வைத்துக்கொண்டால் மட்டன் குழம்பு முதல் மட்டன் வறுவல் வரை பல வகையான உணவுகளுக்கும் பயன்படுத்தலாம்.

சரி, இப்போது வீட்டிலேயே சுவையான மட்டன் மசாலா பொடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

29
மட்டன் மசாலா பொடி செய்ய தேவையான பொருட்கள்
  • மல்லி - 1\2 கப்
  • காய்ந்த மிளகாய் - 12–15
  • முந்திரி - 10
  • உளுந்து - 1 டேபிள்ஸ்பூன்
  • அரிசி- 1 டேபிள்ஸ்பூன்
  • கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
  • மிளகு - 2 டீஸ்பூன்
  • சீரகம் - 2 டீஸ்பூன்
  • சோம்பு - 2 டீஸ்பூன்
  • கசகசா - 1 டீஸ்பூன்
  • கிராம்பு - 6
  • பட்டை - 2 சிறிய துண்டுகள்
  • ஏலக்காய் - 4
  • அண்ணாச்சி பூ - 1
  • பிரியாணி இலை - 1
  • ஜாதிப்பத்திரி- 1 சிறிய துண்டு
  • மராத்தி - மொக்கு 2
  • கல்பாசி - சிறிதளவு
  • கஸ்தூரி மேத்தி - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  • கல் உப்பு - தேவையான அளவு
39
மட்டன் மசாலா பொடி செய்முறை - படி 1

மல்லி, மிளகாய் வறுத்தல்

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடாக்கவும். அதில் மல்லி மற்றும் காய்ந்த மிளகாயைச் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். மசாலாப் பொருட்கள் கருகிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைக்கவும்.

49
படி 2

பருப்பு வகைகளை வறுத்தல்

அதே கடாயில் முந்திரி, உளுந்து, அரிசி மற்றும் கடலைப்பருப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். இவற்றை மிதமான தீயில் நன்றாக வறுக்கவும். பருப்புகள் லேசாக நிறம் மாறி நல்ல வாசனை வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

59
படி 3

வாசனைப் பொருட்களை வறுத்தல்

இப்போது மிளகு, சீரகம், சோம்பு, கசகசா, கிராம்பு, பட்டை, ஏலக்காய், அண்ணாச்சி பூ, பிரியாணி இலை, ஜாதிப்பத்திரி, மராத்தி மொக்கு, கல்பாசி மற்றும் கஸ்தூரி மேத்தி ஆகியவற்றை கடாயில் சேர்க்கவும்.

இவற்றை குறைந்த தீயில் வைத்து லேசாக வறுக்கவும். மசாலாப் பொருட்களில் இருந்து நல்ல நறுமணம் வெளிவந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

69
படி 4

மசாலாப் பொருட்களை ஆறவைத்தல்

வறுத்து வைத்துள்ள அனைத்து மசாலாப் பொருட்களையும் ஒரு அகலமான தட்டில் பரப்பி வைக்கவும். அவை முழுமையாக ஆறிய பிறகே அரைக்க வேண்டும். சூடாக இருக்கும்போதே அரைத்தால் ஈரப்பதம் ஏற்பட்டு பொடியின் தரம் பாதிக்கப்படலாம்.

79
படி 5

மசாலா பொடி அரைத்தல்

மசாலாப் பொருட்கள் முழுமையாக ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு கல் உப்பு சேர்க்கவும். இப்போது அனைத்தையும் நைஸான பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

89
படி 6

சேமித்து வைத்தல்

அரைத்த மசாலாப் பொடியை ஒரு தட்டில் கொட்டி சிறிது நேரம் ஆறவிடவும். பின்னர் ஈரப்பதம் இல்லாத, சுத்தமான காற்றுப் புகாத கண்ணாடி அல்லது உலர்ந்த பாட்டிலில் போட்டு சேமித்து வைக்கவும்.

99
மட்டன் மசாலா பொடியை எப்படிப் பயன்படுத்தலாம்?

மட்டன் குழம்பு: குழம்பு கொதிக்கும்போது தேவையான அளவு மசாலாப் பொடி சேர்த்தால் நல்ல மணமும் சுவையும் கிடைக்கும்.

மட்டன் சுக்கா: மட்டனை வேகவைத்த பிறகு வெங்காயம், தக்காளியுடன் வதக்கி இந்த மசாலாவைச் சேர்க்கலாம்.

மட்டன் கிரேவி: கெட்டியான கிரேவி தயாரிக்கும்போது இந்த மசாலா பொடியைச் சேர்க்கலாம்.

மட்டன் வறுவல்: மட்டனை மசாலாவுடன் சேர்த்து வதக்கும்போது காரமும் நறுமணமும் நிறைந்த சுவை கிடைக்கும்.

மட்டன் மசாலா பொடி தயாரிக்கும்போது கவனிக்க வேண்டியவை

  • மசாலாப் பொருட்களை அதிக தீயில் வறுக்கக்கூடாது. அவை கருகினால் பொடியின் சுவை கசப்பாக மாறிவிடும்.
  • ஒவ்வொரு பொருளையும் அதன் தன்மைக்கு ஏற்ப தனித்தனியாக வறுப்பது நல்லது.
  • கஸ்தூரி மேத்தியை அதிகமாகச் சேர்க்க வேண்டாம். அது அதிகமானால் மசாலாவில் லேசான கசப்புச் சுவை ஏற்படலாம்.
  • மசாலாப் பொருட்கள் முழுமையாக ஆறிய பிறகே அரைக்க வேண்டும்.
  • ஈரமான கரண்டியைப் பயன்படுத்தி மசாலாவை எடுக்கக்கூடாது.
  • மசாலாப் பொடியை வெயில், அடுப்பின் வெப்பம் மற்றும் ஈரப்பதம் படாத இடத்தில் வைக்க வேண்டும்.


எவ்வளவு நாட்கள் சேமித்து வைக்கலாம்?

வீட்டில் தயாரித்த மட்டன் மசாலா பொடியை காற்றுப் புகாத உலர்ந்த பாட்டிலில் சேமித்து வைக்கலாம். சரியாகப் பாதுகாத்தால் சுமார் 1-2 மாதங்கள் வரை அதன் நறுமணத்தைத் தக்கவைத்துக்கொள்ளலாம். நீண்ட நாட்கள் வைத்துப் பயன்படுத்துவதைவிட சிறிய அளவில் தயாரித்து அவ்வப்போது புதிதாகப் பயன்படுத்துவது சிறந்தது.

சிறிய குறிப்பு: இந்த மசாலாவில் சேர்க்கப்படும் மல்லி, மிளகு, சீரகம், சோம்பு போன்றவை மட்டன் உணவுகளுக்கு தனித்துவமான நறுமணத்தையும் சுவையையும் வழங்குகின்றன. உங்கள் காரத்திற்கு ஏற்ப காய்ந்த மிளகாயின் அளவைக் குறைத்தோ அதிகரித்தோ தயாரித்துக்கொள்ளலாம்.

ஒருமுறை வீட்டிலேயே இந்த மட்டன் மசாலா பொடியைத் தயாரித்துப் பாருங்கள். உங்கள் சமையலறையே கமகமக்கும். மட்டன் குழம்பின் சுவையும் நிச்சயம் தனித்துவமாக இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories