1 கப் சோள மாவு இருந்தா போதும்... 10 நிமிடத்தில் வாயில் வைத்தவுடன் கரையும் மும்பை கராச்சி ஹல்வா ரெசிபி!

Published : Nov 15, 2026, 10:14 PM IST

அதிக உழைப்பில்லாமல் வெறும் 10 நிமிடங்களில் நாவில் கரையும் மும்பை கராச்சி ஹல்வாவை வீட்டிலேயே 10 நிமிடத்தில் எளிதாக செய்வது எப்படி? தேவையான பொருட்கள் மற்றும் எளிய செய்முறை இதோ!

PREV
14
நாவில் கரையும் மும்பை கராச்சி ஹல்வா செய்வது எப்படி?

நவராத்திரி பண்டிகைக் காலத்தில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்குச் செய்து கொடுக்க ஏற்ற ஒரு அருமையான இனிப்புதான் மும்பை கராச்சி ஹல்வா. வழக்கமாக ஹல்வா செய்வதற்கு அதிக நேரமும் உழைப்பும் தேவைப்படும். ஆனால், இந்த ஹல்வாவை வெறும் 10 நிமிடங்களில் மிக எளிதாகச் செய்து விடலாம். சோள மாவு, சர்க்கரை மற்றும் நெய் கொண்டு செய்யப்படும் இந்த இனிப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும். இதனை எப்படிச் செய்வது என்று இங்கே விரிவாகப் பார்ப்போம்.

24
தேவையான பொருட்கள்

சோள மாவு (Cornflour): 1 கப்

சர்க்கரை: 1.5 கப்

தண்ணீர்: 4 கப் (மாவு கரைக்க 2 கப் + சர்க்கரை பாகிற்கு 2 கப்)

ஏலக்காய் தூள்: 1/4 தேக்கரண்டி

ஆரஞ்சு உணவு வண்ணம் (Orange Food Colour): 2 துளிகள்

நெய்: 4 முதல் 5 மேஜைக்கரண்டி

உலர் பழங்கள்: நறுக்கிய உலர் திராட்சை & பருப்புகள்

34
செய்முறை - 1

முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் சோள மாவுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து, கட்டிகள் ஏதும் இல்லாதவாறு நன்றாகக் கரைத்துத் தனியாக வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் 1.5 கப் சர்க்கரை மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். சர்க்கரை நன்றாகக் கரைந்து கொதித்து வரும்போது, அடுப்பைச் சிறிய தீயில் (Sim) வைக்கவும்.

இப்போது கரைத்து வைத்துள்ள சோள மாவுக் கலவையைச் சர்க்கரை பாகில் மெதுவாக ஊற்றி, கைவிடாமல் தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை நன்றாகக் கெட்டியாகி கண்ணாடி போல் திரண்டு வரும்போது, ஏலக்காய் தூள் மற்றும் ஆரஞ்சு உணவு வண்ணம் சேர்த்து நன்றாகக் கலக்கவும். அடுத்து, எடுத்து வைத்துள்ள நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்து ஹல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் வரை கிளறவும்.

44
செய்முறை - 2

இறுதியாக, நறுக்கி வைத்துள்ள உலர் பருப்புகள் மற்றும் திராட்சையைச் சேர்த்து ஒருமுறை கிளறி அடுப்பை அணைக்கவும். நெய் தடவிய ஒரு தட்டில் இந்த ஹல்வாவைக் கொட்டிச் சமப்படுத்தவும். நன்றாக ஆறின பிறகு, உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் துண்டுகளாக்கிப் பரிமாறலாம். அவ்வளவுதான், நாவில் கரையும் சுவையான மும்பை கராச்சி ஹல்வா தயார்! இந்த நவராத்திரி நாளில் குறைந்த நேரத்தில் இந்த இனிப்பைச் செய்து அசத்துங்கள்!

Read more Photos on
click me!

Recommended Stories