Bizarre Foods | இதெல்லாமா சாப்பிடுவாங்க! வினோத உணவு வகைகள்!

First Published | Aug 16, 2024, 7:47 PM IST

உணவுவகை என்றாலே நமக்கு தெரிந்தது அரிசி, பருப்பு தான் இறைச்சி என்றால் ஆடு, கோழி, மீன் மற்றும் சில. ஆனால் உலகின் பல்வேறு இடங்களில் வினோதமான உணவுகள் கிடைக்கின்றன. கீழ் காணும் ஏதேனும் ஒரு வகை உணவை நீங்கள் உண்டிருந்தால் கமெண்ட் செய்யுங்கள்...
 

டெண்டக்கிள்ஸ், தென் கொரியா

இது ரொம்பவே வினோதமான உணவுதான், தென்கொரியாவில் கணவாய் மீன்களின் கொடுக்குகள் (டெண்டக்கிள்) பச்சையாக பரிமாறப்படுகிறது. இதை நீங்கள் சரியாக மென்று உண்ணவில்லை என்றால் அதன் கொடுக்குகள் உங்கள் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறக்கக்கூடும். மிககவனமாக சாப்பிட வேண்டிய உணவு இது.
 

கினிப் பன்றி, பெரு

பெரு நாட்டில் ஆதி காலம் முதல் இந்த உணவை சமைக்கிறார்கள். குய் என்று அழைக்கப்படும் இந்த உணவானது பன்றி கறியை பெரு நாட்டு பாரம்பரிய முறையில் வறுத்து உணவாக பரிமாறுகிறார்கள்.
 

Tap to resize

நூற்றாண்டு முட்டைகள், சீனா

சீனா நாட்டில முட்டையை வினோத முறையில் சமைக்கிறார்கள். முட்டைகள் களிமண், சாம்பல் மற்றும் உப்பு ஆகியவற்றால் தடவி மாதங்களுக்கு புதைத்து விடுகின்றனர். சிறிது காலம் கழித்து அந்த முட்டையின் மஞ்சள் கரு முற்றிலும் பச்சை நிறமாக மாறுகிறது. பின்னர், அதனை எடுத்து நெருப்பில் சுட்டு சமைத்து சாப்பிடுகின்றனர்.
 

டூனா மீன் கண்கள், ஜப்பான்

ஜப்பான் கடல் பகுதியில் டூனா மீன்கள் அதிகம் காணப்படுகின்றன. அந்த மீனின் கண்களை மட்டும் எடுத்து வைத்து ஜப்பான் கரைகளில் ஒரு வினோத உணவு விற்பனை செய்யப்படுகிறது. சிறிதளவு பூண்டு, சோயா சாஸ் மற்றும் எலுமிச்சை சேர்த்து சமைக்கப்பட்டு பரிமாறப்படுகிறது.
 

வறுத்த டரான்டுலா, கம்போடியா

வறுத்த சிலந்தி, இதுதான் கம்போடியாவின் ஸ்பெஷல் ஸ்னாக்ஸ், நல்ல மொறுமொறுவென இருக்குமாம். கம்போடியாவில் 1970களில் மக்கள் பட்டினியால் வாடியபோது கையில் சிக்கிய இந்த டரான்டுலா வகை சிலந்திகளை வறுத்து சாப்பிட தொடங்கியுள்ளனர். நாளடைவில் இது சூப்பர் உணவாக மாறியுள்ளது.

வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத 10 பழங்கள்!
 

எறும்பு முட்டை சூப், லாவோஸ்

உங்களுக்கு பசியே இல்லையா? கவலை வேண்டாம் பசியை அதிகரிக்கும் ஒரு வகை சூப் லாவோஸில் விற்கப்படுகிறது. அது Gaeng Kai Mot Daeng என்ற சூப். இந்த சூப் எறும்பு முட்டைகள் கொண்டு சமைக்கப்படுகிறது. இது மிக மிக புளிப்பாகவும், சுவையாகவும் இருக்குமாம். இத நம்மூர்காரர்கள் பார்த்தால் இருக்கிற பசியும் போய்விடும் போல் உள்ளது.
 

ஜெல்லியில் மூஸ் மூக்கு, கனடா

நம்ம ஊரில் ஆடு, மீன், கோழி இறைச்சி வெட்டும்போது தலைகளை வெட்டி தூக்கி போட்டு தான் சமைப்போம். ஆனால், கனடாவில் கடமான் மூக்கு பகுதியை மட்டும் தனியாக வெட்டி, முடிகளை அகற்றி ஜெல்லி வடிவில் சமைத்து சாப்பிடுகிறார்கள். மூக்கா.. ஆமாம் முக்குதான் சாப்பிடுங்க...
 

லார்வா சீஸ், இத்தாலி

இத்தாலியில் "அழுகிய சீஸ்" என்றழைக்கப்படும் செம்மறி ஆடுகளின் பாலிலிஇருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை பெகோரினோ சீஸை ஒரு இருண்ட அறையில் பல மாதங்களுக்கு பூட்டி வைத்துவிடுவர். இதில் பூச்சிகள் முளைத்து, வளர்ந்து மலம் கழித்து கெட்டுவிட்டதாக நினைக்காகமல், புதுவித சுவை கொடுப்பதாக நினைக்கிறார்கள். ஆனால், இதை சாப்பிடுவதால் உடல்நல கோளாறு ஏற்படும் எனக்கூறி ஐரோப்பிய ஒன்றியம் இதை உண்ண தடைவிதித்துள்ளது.

பருப்பு சாப்பிட்டா எடை குறையுமா? நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்

கார்ன் ஸ்மட், மெக்சிகோ

ஆதிகாலம் முதலே மெக்சிகன் மக்கள் மக்காச்சோளத்தில் வளரும் ஹூட்லாகோச் என்ற ஒரு வகை பூஞ்சையை உணவாக சாப்பிடுகின்றனர். இனிப்பு மற்றும் புகைந்துபோன உணவின் சுவை போல் உள்ள இந்த வகை உணவில் சில ஆரோக்கிய வைட்டமின்கள் உள்ளதாக கூறுகின்றனர்.
 

Latest Videos

click me!