idli batter vada recipe: ஸ்கூல் விட்டு வந்ததும் பசிக்கிறது என்று சொல்லும் பிள்ளைகளுக்கு ஒரு மொறுமொறு ஸ்நாக்ஸ் அதுவும் ஈஸியாக வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்ப்போம். இந்தக் ஸ்நாக்ஸ் வெறும் 5 நிமிடத்தில் செய்து விடலாம்.
மாலை நேரத்தில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள் உடனடியாக ஏதாவது சுவையான ஸ்நாக்ஸ் கேட்பது வழக்கமான ஒன்றுதான். அவர்களின் குட்டி பசியை போக்க கடையிலிருந்து வாங்கும் பதப்படுத்தப்பட்ட ஸ்நாக்ஸ்களுக்குப் பதிலாக, வீட்டிலுள்ள எளிய பொருட்களைக் கொண்டே ஆரோக்கியமான மற்றும் சுவையான ஸ்நாக்ஸ்களைச் செய்து கொடுக்கலாம். அந்த வகையில், வீட்டில் இருக்கும் இட்லி மாவு மற்றும் ரவையைக் கொண்டு மிக எளிதாகச் செய்யக்கூடிய மொறுமொறு வடை ரெசிபி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
26
தேவையான பொருட்கள்
இட்லி மாவு - 1 கப்
ரவை - 1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம்
பச்சை மிளகாய்
கொத்தமல்லி
கருவேப்பிலை
இஞ்சி
துருவிய கேரட்
உப்பு
சீரகம்
பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய்
36
படி 1
அடுப்பில் நான்-ஸ்டிக் கடாய் வைத்து, அதில் 1/2 கப் தண்ணீர் ஊற்றவும். அதனுடன் 1 கப் மாவு மற்றும் 1/2 கப் ரவையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். மாவும் ரவையும் சேர்ந்து நன்றாக வெந்து வரும் வரை கலந்து, பின்னர் அதை இறக்கி ஆறவிடவும். மாவு ஆறும் இடைவெளியில், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை மற்றும் இஞ்சியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டைத் துருவித் தனியாக வைத்துக் கொள்ளவும்.
ஆறிய மாவுக் கலவையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றைச் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு சீரகம் சேர்த்து, அனைத்தும் நன்றாகக் கலக்கும்படி பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவு வடை தட்டும் பதத்தில் இருக்கும். உள்ளங்கையில் சிறிதளவு தண்ணீர் தடவிக் கொண்டு, மாவை எடுத்து மெதுவடை வடிவில் தட்டி, நடுவில் ஓட்டை போடவும்.
56
படி 3
கடாயில் எண்ணெய் காய வைத்து, தட்டிய வடைகளைப் போடவும். மிதமான தீயில் மெதுவாகப் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் பொரித்தெடுக்கவும். இதோடு சேர்த்து சட்னி அல்லது தக்காளி சாஸ் கொடுத்தால் டேஸ்ட ஆக இருக்கும். வெளிப்புறம் நன்றாக மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும் இருக்கும் இந்த வடையை மாலை நேரத் தேநீர் அல்லது ஜூஸ் உடன் சூடாகப் பரிமாறினால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
66
குழந்தைகளுக்கான மாலை நேரச் சிற்றுண்டி குறிப்புகள்
காரம் குறைத்தல்: குழந்தைகளுக்குக் கொடுக்கும்போது பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியின் அளவைக் குறைத்துச் சேர்க்கலாம் அல்லது குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்பச் சரிசெய்து கொள்ளலாம்.
நிறமும் சுவையும்: துருவிய கேரட் மற்றும் கொத்தமல்லி சேர்ப்பதால், வடை பார்ப்பதற்கு வண்ணமயமாகவும், காய்கறிகளின் சத்துக்களுடனும் இருக்கும்.