Healthy keerai rice: கீரை சாப்பிட அடம்பிடிக்கும் உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு இந்த மாதிரி ஒருமுறை கீரை சாதம் செய்து கொடுங்கள். இது உடலுக்கு சத்தானது அதுமட்டுமின்றி உங்கள் பிள்ளைகளின் லஞ்ச் பாக்ஸிற்கும் இது ஏற்றது.
கீரை சாப்பிடத் தயங்குபவர்களும், குழந்தைகளும் விரும்பி உண்ணும் வகையில் மிகவும் ஆரோக்கியமாகவும் சுவையாகவும் செய்யக்கூடிய ஒரு எளிய ரெசிபிதான் கீரை சாதம். இதனை மதிய உணவுக்கான லஞ்ச் பாக்ஸாகக் கட்டித் கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். சிறுகீரை, அரைக்கீரை, முளைக்கீரை அல்லது வெந்தயக்கீரை என எந்தக் கீரையைக் கொண்டும் இதைச் செய்யலாம். கீரையை பார்த்தாலே முகம் சுளிக்கும் உங்கள் வீட்டு ஆட்களுக்கு இந்த ரெசிபி ஏற்றதாக இருக்கும்.
ஒரு வாணலியில் மல்லி, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து, சிவந்து வரும்போது 4 காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து ஆறவைத்துப் பொடி செய்து கொள்ளவும். கடாயில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் கடலைப்பருப்பு சேர்த்துச் சிவக்க விடவும். பின்னர் உளுத்தம்பருப்பு, சீரகம், கடுகு சேர்த்துச் சிவந்ததும் வேர்க்கடலை, முழு காய்ந்த மிளகாய், பெருங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிவந்து வரும்போது வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
55
படி 2
மஞ்சள் தூள், அரைத்த பொடியிலிருந்து 1.5 டேபிள் ஸ்பூன், மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்துக் கலக்கவும். பொடியாக நறுக்கிய கீரையைச் சேர்த்துக் கலந்து, லேசாகத் தண்ணீர் தெளித்து 2 நிமிடம் மூடி வேக வைக்கவும். தீயைக் குறைத்து, உதிரியாக வடித்த சாதம், மீதமுள்ள உப்பு மற்றும் அரைத்த பொடியைச் சேர்த்து, சாதம் உடையாமல் தூக்கிப் போட்டுக் கிளறி இறக்கினால் சுவையான கீரை சாதம் தயார்.