குக்கரில் அரிசி, பருப்பு வைத்தால் தண்ணீர் வெளியேறுகிறதா? அப்படின்னா நீங்க செய்ய வேண்டியது இதுதான்!!

இப்போதெல்லாம், ஒவ்வொரு வீட்டிலும் உணவு சமைக்க பிரஷர் குக்கர் பயன்படுத்தப்படுகிறது. இது எரிவாயுவை மிச்சப்படுத்துவதுடன் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. ஆனால் அடிக்கடி குக்கரின் விசிலில் இருந்து தண்ணீர் வெளியேறி, ஸ்டவ் மற்றும் குக்கரும் சேதமாகிறது. இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

How to fix pressure cooker water leaking While cooking
Rressure Cooker tips

பிரஷர் குக்கரில் அதிக தண்ணீர் சேர்த்து, அதிக தீயை வைத்தால், விசிலுடன் தண்ணீரும் வெளியேறும். எனவே குக்கரில் உணவு சமைக்கும் போது சரியான அளவு தண்ணீர் சேர்க்கவும். 

How to fix pressure cooker water leaking While cooking
Dall cooking in the Cooker

அரிசியை சமைக்க குக்கரை ஸ்டவ் மீது வைக்கும் போது, ​​கேஸ் தீயை அதிக அளவில் வைக்க வேண்டாம். இதனால், குக்கரில் உள்ள தண்ணீர் விசில் மூலம் வெளியேறும். எனவே, உணவை மிதமான சூட்டில் சமைக்கவும்.


Cooker Fire

அரிசியை சமைக்க குக்கரை வைக்கும் போது தீயை அதிகமாக வைக்காமல், அளவான தீச்சுடரில் சமைக்கவும். அப்படி செய்தால் தண்ணீர் வெளியேறாது.

Cooker Whistle

குக்கரின் விசிலில் சாதம், பருப்பு போன்ற பொருட்கள் சிக்கிக் கொள்ளும். இது அழுக்காக மாறிவிடும்.  இதனாலும், குக்கர் விசில் வரும்போது தண்ணீரும் வெளியேறும். எனவே பிரஷர் குக்கர் விசிலை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். 

Cooker Gasket

ஒரு குக்கரின் ரப்பரை மற்றொரு குக்கருக்கு பயன்படுத்த வேண்டாம். இதனால் கேஸ்கட் பொருத்தம் ஆகாமல், லூஸ் ஆகலாம்.
 

Cooker Tips

குக்கர் பழையதாக இருந்தாலும் இந்த சிக்கல் ஏற்படும். எப்போதும் கரண்டியை குக்கர் விளிம்பில் தட்ட வேண்டாம். இதனாலும் குக்கரின் நுனிப் பகுதி சமன் இல்லாமல் போய்விடும். இதனாலும், குக்கரில் இருந்து தண்ணீர் வழியலாம். அப்படி இருக்கும் குக்கரை மாற்றுவது நல்லது. 

Cooker water leakage

குக்கர் தண்ணீர் வெளியேறும் பட்சத்தில், பருப்பு வைத்து இருந்தால், குக்கருக்குள் சிறிய கிண்ணத்தை போட்டு வைக்கவும். தண்ணீர் வெளியேறாது. இவ்வளவு சிக்கல் எதற்கு, தண்ணீர் வெளியேறினால், கேஸ்கட் மாற்றுங்கள் அல்லது பழுதுபார்க்கவும்.
 

Latest Videos

click me!