உடல் ஆரோக்கியம் பெற நட்ஸ்களை சாப்பிடுவதற்கு சரியான முறை இதுதான்...!!

First Published May 25, 2023, 2:49 PM IST

நட்ஸ், நம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் பல ஊட்டச்சத்துக்கள்  நிறைந்துள்ளது. இவற்றை சாப்பிடுவதற்கு சரியான முறை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நட்ஸ் சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. எனவே இவற்றை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். மேலும் இதில் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் போன்ற நுண்ணுயிர் ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. அதுபோலவே இது எலும்புகளின் பலவீனத்தை போக்கவும், இருதய நோய், முடி உதிர்வு, எடை அதிகரிப்பு, மனநலம் சார்ந்த பிரச்சனைகள், தசை பலவீனம் போன்றவற்றை தடுக்க உதவுகிறது. இதில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், நட்ஸ் சாப்பிடுவதற்கான சரியான முறையை நாம் அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க கூடிய 5 வகையான நட்ஸ்களை பற்றி பார்க்கலாம். 

நிபுணர்களின் கூற்றுப்படி,நட்ஸ்களை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிட வேண்டும். மேலும் மாதவிடாயின் நாளில் ஊற வைத்த நட்ஸ் சாப்பிடும் போது அன்றைய நாள் முழுவதும் அவர்கள் ஆற்றலுடன் செயல்படலாம். இது உடலுக்கு தேவையான இரும்புச் சத்தை அதிகரிப்பதோடு மட்டுமின்றி குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும். நல்ல தூக்கம் பெற இதை சாப்பிடுவது நல்லது. குறிப்பாக இவை உங்கள் சருமம் மற்றும் கூந்தலை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.

கருப்பு உலர் திராட்சை:

கருப்பு உலர் திராட்சையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கின்றன. மேலும் இதில் நிறைந்துள்ள இரும்புச்சத்து கருப்பையில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
 

பாதாம்:
பாதாமில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, கால்சியம், செம்பு, மெக்னீசியம், ரிபோஃப்ளேவின், இரும்புச் சத்து, பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை கொலஸ்ட்ராலை குறைக்கவும், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இதில் உள்ள பண்புகள் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும், புற்றுநோயின் அபாயத்தை குறைக்கவும் உதவுகின்றன.

பிஸ்தா:
பிஸ்தாவில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, புரதம், வைட்டமின் பி6 மற்றும் தயாமின் நிறைந்துள்ளன. இவை கண்கள் மற்றும் குடல்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். பிஸ்தாவை இரவில் சாப்பிடுவதால் நல்ல தூக்கம் வரும் இதனுடன் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கலாம்.

அக்ரூட் பருப்புகள்:
இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது வீக்கத்தை குறைக்கவும், மூளை மற்றும் குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவும்.

இதையும் படிங்க: தினமும் முகத்திற்கு ரோஸ் வாட்டர் பயன்படுத்துவது நல்லதா? என்னன்னு தெரிஞ்சுக்க இதை படிங்க..!!

சாப்பிடும் முறை:

நட்ஸ்களை குறைந்தது 6 முதல் 8 மணி நேரமாவது ஊறவைக்க வேண்டும். ஊற வைத்த நட்ஸ்களை சாப்பிடுவது நல்லது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. இதனால் ஜீரணம் எளிதாகும். 

சாப்பிடும் நேரம்:

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம். ஏனெனில் இது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

எவ்வளவு நட்ஸ் சாப்பிடலாம்:

நட்ஸில் 80 சதவீதம் கொழுப்பு உள்ளது. எனவே இவற்றை அதிகமாக சாப்பிடுவதால் அஜீரணம், உடல் சூடு, வயிற்றுப்போக்கு, எடை அதிகரிப்பு, பசியின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதனை சரியான அளவுகளில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். நல்ல செரிமானம் உள்ளவர்கள், தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள், போதிய அளவு தண்ணீர் குடிப்பவர்கள் மற்றும் எவ்வித நோயும் இன்றி ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் மட்டும் தினமும் ஒரு கைப்பிடி அளவு நட்ஸ் சாப்பிடலாம்.

click me!