
Gen Z தலைமுறையினரைப் பொறுத்தவரை, உணவு என்பது வெறும் பசியைப் போக்கும் விஷயம் மட்டுமல்ல. அது அவர்களின் விருப்பம், தனித்துவம் மற்றும் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் ஒரு Expression-ஆகவும், ஒரு Vibe-ஆகவும், நண்பர்களுடன் நேரத்தை செலவிடும் முக்கியமான Socializing Tool-ஆகவும் மாறியுள்ளது.
இன்னைக்கு என்ன சமையல்? என்று யோசித்த காலம்போய், இன்னைக்கு எந்த கஃபேல என்ன டிரை பண்ணலாம்? என்று ரீல்ஸ் பார்த்து ஸ்பாட் ஃபிக்ஸ் செய்யும் காலம் இது. சாப்பிடுவது மட்டும் போதாது அது டேஸ்ட்டியாகவும், டிரெண்டியாகவும், போட்டோ எடுக்க அழகாகவும் இருக்கணும்.
இன்றைய Gen Z உணவுப் பழக்கத்தை இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம். கல்லூரி, வேலை, நண்பர்களுடன் சந்திப்பு, சமூக வலைதளங்கள் என வாழ்க்கை முறை வேகமாக மாறியிருக்கும் நிலையில், வீட்டில் சமைத்து சாப்பிடுவதைத் தாண்டி கஃபே, ரெஸ்டாரன்ட், ஃபாஸ்ட் ஃபுட் கடைகள், ஆன்லைன் ஃபுட் டெலிவரி என வெளியில் சாப்பிடும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்திய உணவு சேவைத் துறையைப் பற்றிய Swiggy–Bain ஆய்வின்படியும், இளைய தலைமுறையினரிடையே வீட்டிற்கு வெளியே சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்க போக்காக உள்ளது.
அதிலும், அந்த கடையில் சாப்பிட்டீங்களா? இந்த புதிய உணவை டிரை பண்ணீங்களா? என்ற உரையாடல்கள் Gen Z- வின் உணவுக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டன.
2026-ம் ஆண்டு YouGov ஆய்வின்படி, Gen Z பெரியவர்களில் 74 சதவீதம் பேர் புதிய உணவுகள் மற்றும் புதிய வகை cuisine-களை அனுபவிக்க விரும்புவதாகவும், 53 சதவீதம் பேர் துரித உணவகங்களைத் (Fast foods) தேர்வு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Gen Z (ஜெனரேஷன் Z) பொதுவாக 1997 முதல் 2012 வரை பிறந்தவர்களை குறிப்பிடுகிறார்கள். 2026-ஐ கணக்கில் எடுத்தால், இவர்களின் வயது சுமார் 14 முதல் 29 வயது வரை இருக்கும்.
1997 - 2000: 26- 29 வயது
2001- 2005: 21 - 25 வயது
2006 - 2012: 14 - 20 வயது
இவர்கள் Gen Y-க்கு அடுத்த தலைமுறை, Gen Alpha-க்கு முந்தைய தலைமுறை.
வீட்டுச் சாப்பாடு ஆரோக்கியமானது என்றாலும், Gen Z -யினர் வெளியில் அதிகம் சாப்பிடுவதற்குப் பின்னணியில் பல சுவாரஸ்யமான காரணங்கள் உள்ளன.
கல்லூரி முடிந்ததும் நண்பர்களுடன் ஹேங்அவுட் செய்வதாக இருந்தாலும், லேப்டாப்பை எடுத்துக்கொண்டு கஃபேவில் அமர்ந்து வேலை (Workation vibe) செய்வதாக இருந்தாலும், Gen Z தலைமுறையினரின் முதல் தேர்வாக அவுட்டோர் ஸ்பாட்களே இருக்கின்றன.
தட்டில் உணவு வந்ததும் சாப்பிடுவதை விட, அதை போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ( Instagram Story) அல்லது பிண்டரெஸ்ட்டில் போஸ்ட் செய்வது Pinterest) தான் முக்கியம். இதற்காகவே அழகிய ஆம்பியன்ஸ் (Ambience)உள்ள உணவகங்களைத் தேடிச் செல்கிறார்கள்.
இன்ஸ்டாகிராம் மற்றும் கொரியன் டிராமாகள் (K-Dramas) மூலம் உலகளாவிய உணவு முறைகள் விரல் நுனியில் கிடைப்பதால், புதுப் புது உணவுகளை டேஸ்ட் செய்து பார்க்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது. பிஸியான வாழ்க்கையில் நண்பர்களுடன் வெளியில் சென்று சாப்பிடுவது ஒரு சிறந்த மைண்ட் ரிலாக்சேஷனாக மாறியுள்ளது.
ஃபியூஷன் ஃபுட் (Fusion Foods)
பட்டர் சிக்கன் பாஸ்தா, பீட்சா, நெய் ரோஸ்ட் பர்கர் என பாரம்பரிய சுவையோடு வெஸ்டர்ன் டைப் கலந்த புது உணவுகள் இளைஞர்களின் பிரபலமான தேர்வுகளில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் 2025-ம் ஆண்டு Swiggy-ல் பர்கர் 4.42 கோடி ஆர்டர்களுடன் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் ஒன்றாக இடம்பெற்றது.
Gen Z தலைமுறையினரின் ஃபேவரிட் மெனு கார்டில் முதலிடம் பிடிக்கும் உணவுகள் இவைதான்.
பிரியாணி
துரித உணவுகளுக்கு மட்டுமே Gen Z-வின் ஆதரவு என்று நினைத்துவிட முடியாது. பாரம்பரிய உணவுகளுக்கும் அவர்களிடம் தனி மவுசு இருக்கிறது. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் நம்ம ஊரு பிரியாணி.
2025-ம் ஆண்டு ஸ்விக்கியில் (Swiggy) மட்டும் சுமார் 9.3 கோடி பிரியாணி ஆர்டர்கள் செய்யப்பட்டதாக அந்நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை தெரிவித்துள்ளது. புதிய உணவுகளை ட்ரை செய்வதில் ஆர்வம் காட்டினாலும், பிரியாணி போன்ற இந்தியாவின் பிரபலமான பாரம்பரிய உணவுகளுக்கு Gen Z மத்தியில் இருக்கும் கிரேஸும் குறையாமல் தொடர்ந்து நீடிக்கிறது.
ஒரே மாதிரியான உணவை சாப்பிடுவதற்கு பதிலாக புதிதாக ஏதாவது ட்ரை செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் Gen Z-யிடம் உள்ளது. குறிப்பாக, கொரியன் நாடகங்கள் (K-Drama) மற்றும் K-Pop கலாச்சாரத்தின் தாக்கத்தால் கொரியன் உணவுகள் மீது இளைய தலைமுறையினரின் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
கொரியன் நாடகங்களில் கதாபாத்திரங்கள் ரசித்து சாப்பிடும் ராமென் (Ramen), ட்டோக்போக்கி (Tteokbokki), கொரியன் ஃப்ரைடு சிக்கன் போன்ற உணவுகளைப் பார்த்ததும், இதன் டேஸ்ட் எப்படி இருக்கும்? என்ற ஆர்வம் பலரிடமும் ஏற்படுகிறது.
இதனால் அந்த உணவை நேரில் சுவைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை, புதிய உணவு அனுபவங்களைத் தேடும் பழக்கத்தையும் ஊக்குவிக்கிறது. காரமான சுவை, வித்தியாசமான பரிமாறும் முறை, என ஒவ்வொன்றும் Gen Z-க்கு பிடித்த கலாச்சாரத்துடன் பொருந்துகிறது
சீக்கிரம் சாப்பிடணும், அதே நேரத்தில் டேஸ்ட்டும் செமையாக இருக்கணும் என்ற Gen Z-யின் எதிர்பார்ப்புக்கு மோமோஸ், நூடுல்ஸ், ரோல்ஸ் போன்ற உணவுகள் கச்சிதமாகப் பொருந்துகின்றன.
குறைந்த நேரத்தில் சாப்பிட முடிவதுடன், பலவிதமான காரமான சாஸ்கள், விதவிதமான நிரப்புகள் (fillings)மற்றும் சுவைகளை விருப்பத்துக்கு ஏற்ப தேர்வு செய்யும் வசதியும் இருப்பதால், இவை இளைஞர்களிடையே பிரபலமான உணவுத் தேர்வுகளாக மாறியுள்ளன.
சுவையாக இருக்கணும், அதே நேரத்தில் புரதச்சத்தும் இருக்கணும் என்ற எதிர்பார்ப்பும் Gen Z-யின் உணவுத் தேர்வுகளில் அதிகரித்து வருகிறது. 2026-ம் ஆண்டு Ipsos ஆய்வில், இந்திய Gen Z-வினர் உணவைத் தேர்வு செய்யும்போது ஆரோக்கியம், வசதி, விலை போன்ற காரணிகளுடன் புரதச்சத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக புரதச்சத்து நிறைந்த முட்டை, வறுத்த உணவுகள் (grilled), தயிர் அடிப்படையிலான சிற்றுண்டிகள் போன்றவற்றுக்கும் இளைஞர்களிடையே வரவேற்பு கிடைத்து வருகிறது.
Swiggy-ன் 2025 தரவுகளின்படி, அதிக புரதச்சத்து கொண்ட உணவுப் பிரிவில் 2.3 கோடி ஆர்டர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவையை விட அனுபவம் முக்கியம்
அதிக அளவில் சாப்பிடுவதைவிட, சாப்பிடும் உணவின் தரம், அதன் அழகான பிரசென்டேஷன் மற்றும் அந்த இடம் தரும் தனித்துவமான வைப் ஆகியவற்றுக்கே ஜென்சி தலைமுறையினர் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
பசிக்குதா? பிடித்த உணவு எதுவாக இருந்தாலும் ஒரே கிளிக் போதும் என்ற நிலைக்கு இன்றைய உணவுப் பழக்கம் மாறிவிட்டது. ஸ்விக்கி (Swiggy), சொமாட்டோ (Zomato) போன்ற உணவு டெலிவரி செயலிகள் மூலம், நினைத்த உணவை வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து வரவழைக்கும் வசதி, Gen Z தலைமுறையின் உணவுப் பழக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலை, கல்லூரி, பயணம் என பரபரப்பாக ஓடும் வாழ்க்கையில், தினமும் சமையல் செய்வதற்கு நேரம் ஒதுக்குவது பலருக்கும் சவாலாக இருக்கிறது. அதனால், சில நேரங்களில் வெளியே சாப்பிடுவது அல்லது பிடித்த உணவை ஆர்டர் செய்து வரவழைப்பது எளிதான மற்றும் வசதியான தேர்வாக மாறியுள்ளது.
இந்த உணவு இவ்வளவு வைரலாகிறதே நாமும் ஒருமுறை ட்ரை பண்ணிப் பார்க்கலாமே என்ற ஆர்வத்தை இன்றைய சமூக வலைதளங்கள் Gen Z மத்தியில் உருவாக்குகின்றன.
இன்ஸ்டாகிராம், யூடியூப், குறும்பட வீடியோ தளங்கள் போன்றவற்றில் புதிய உணவுகள் வைரலாகும்போது, அவற்றை நேரில் சென்று சுவைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.
முக்கியமான மாற்றமும் இருக்கிறது
சுவையாக இருந்தால் மட்டும் போதுமா? ஹெல்த்தியாகவும் இருக்கணுமே என்ற எண்ணமும் Gen Z-யின் உணவுத் தேர்வுகளில் மெல்ல அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, புரதச்சத்து, நார்ச்சத்து, நல்ல கொழுப்புகள் மற்றும் குறைந்த அளவு பதப்படுத்தப்பட்ட பொருட்கள் உள்ள உணவுகளைத் தேர்வு செய்வதில் சில இளம் நுகர்வோர் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்தியாவில் உணவைத் தேர்வு செய்யும்போது ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருவதாக PwC ஆய்வும் தெரிவிக்கிறது.
அதனால், இன்றைய Gen Z உணவுக் கலாச்சாரத்தை ஃபாஸ்ட் ஃபுட் மட்டும் என்று சுருக்கிவிட முடியாது. ஒருபுறம் பர்கர், பீட்சா, பிரியாணி போன்ற பிடித்த உணவுகளை ரசிக்கும் அவர்கள், மறுபுறம் புரதச்சத்து நிறைந்த உணவுகள், ஆரோக்கியமான தேர்வுகள், புதிய வகை உணவுகள் என பலவற்றையும் முயற்சி செய்கிறார்கள்.