மட்டன் வேகுற நேரத்துல, இன்னொரு பாத்திரத்துல ரெண்டு ஸ்பூன் எண்ணெய் ஊத்துங்க. அதுல வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகு சேர்த்து மிதமான தீயில வதக்குங்க. வெங்காயம் பாதி வதங்கினதும் கசகசா, பொட்டுக்கடலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நல்லா வதக்குங்க. அடுப்பை ஆஃப் பண்றதுக்கு முன்னாடி துருவிய தேங்காய், ஒரு கைப்பிடி கொத்தமல்லி, ஒரு கைப்பிடி புதினா சேர்த்து லேசா வதக்குங்க. (புதினாவும் கொத்தமல்லியும் கொஞ்சம் தூக்கலா இருந்தா சாப்ஸ் கலரும் டேஸ்ட்டும் சூப்பரா இருக்கும்). இந்த கலவை ஆறுனதும், மிக்ஸி ஜார்ல மாத்தி கொஞ்சமா தண்ணி ஊத்தி நல்லா நைசா அரைச்சுக்கோங்க.
மசாலாவை சேர்த்து வேகவைக்க
குக்கர் பிரஷர் அடங்கினதும் மூடியை திறங்க. ஏற்கனவே 70% வெந்திருக்கற மட்டன்ல, நாம அரைச்சு வெச்சிருக்கற பச்சை மசாலாவை சேருங்க. மிக்ஸி ஜாரை கழுவி கொஞ்சமா தண்ணி ஊத்தி நல்லா மிக்ஸ் பண்ணுங்க (நிறைய தண்ணி ஊத்தினா கிரேவி தண்ணியாட்டம் ஆகிடும்). கடைசியா உப்பு சரியா இருக்கான்னு செக் பண்ணிட்டு, குக்கரை மூடி மறுபடியும் 3 விசில் விடுங்க.
குக்கர் முழுசா ஆறுனதும் மூடியை திறந்தா... மேல எண்ணெய் மிதக்க, கமகமக்கும் மிலிட்டரி ஹோட்டல் ஸ்டைல் மட்டன் சாப்ஸ் ரெடி! உங்களுக்கு கிரேவி இன்னும் திக்கா வேணும்னா, மூடியை திறந்து வெச்சே ரெண்டு நிமிஷம் கொதிக்க விடலாம். இந்த வீக்கெண்ட்ல சுடச்சுட சாதம், சப்பாத்தியோட இந்த மட்டன் சாப்ஸை பரிமாறினா, வீட்ல இருக்கறவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க!
Fresh Mutton Tips: மட்டன் வாங்குறீங்களா? ஃப்ரெஷ்ஷான, பஞ்சு மாதிரி மட்டன் வாங்க சூப்பர் டிப்ஸ்!