இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஒரு சூப்பர்ஃபுட் ஆக நெல்லிக்காய் கருதப்படுகிரது. அதிக அளவு வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது. காலையில் ஒரு கிளாஸ் நெல்லிக்காய் சாறு குடிப்பது ஆரோக்கியத்திற்கு அற்புதமான நன்மைகளைத் தரும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் மற்றும் நாள்பட்ட நோய்களை தடுக்கவும் உதவும். நெல்லிக்காய் நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துவதாக அறியப்படுகிறத.
நெல்லிக்காய் ஜூஸை வெறும் வயிற்றில் உட்கொள்வதே பிரபலமான மற்றும் மிகவும் பயனுள்ள வழி என்று நிபுணர்கள் கூறுகின்றனர். வெற்று வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.