முதலில் வேகவைத்த சர்க்கரைவள்ளி கிழங்கை எந்தவித கட்டிகளும் இல்லாதவாறு மென்மையாக நன்றாக மசித்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் 2 கப் தோசை மாவை எடுத்துக்கொண்டு, அதனுடன் மசித்து வைத்துள்ள சர்க்கரைவள்ளி கிழங்கைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் இந்த மாவுக் கலவையுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சீரகம், நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மாவை மெதுவாக ஒருசேரக் கிளறி விடவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும், தயார் செய்து வைத்துள்ள மாவில் இருந்து ஒரு கரண்டி எடுத்துக்கல்லில் ஊற்றி நைஸாகப் பரப்பவும். தோசையைச் சுற்றிலும் சிறிதளவு நெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக மொறுமொறுவென வேகவிடவும். தோசையின் இருபுறமும் நன்கு வெந்ததும் அதை எடுத்துச் சூடாகக் காரச் சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பரிமாறலாம்.