ஒரு துளி கூட கசக்காது: தட்டே காலியாகும் சுவையான பாகற்காய் வறுவல்; டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்!

Published : Oct 13, 2026, 12:27 PM IST

கசப்பே தெரியாமல் மொறுமொறுப்பான, சுவையான பாகற்காய் வறுவல் செய்வது எப்படி? தட்டே காலியாகும் அளவுக்கு அசத்தலான சுவையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் எளிய செய்முறை பற்றி பார்ப்போம்.

PREV
14
தட்டே காலியாகும் சுவையான பாகற்காய் வறுவல்

பாகற்காய் என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அதன் கசப்புச் சுவைதான். பல முக்கிய சத்துக்கள் நிறைந்த காய்கறியாக இருந்தாலும், இந்தக் கசப்புத்தன்மை காரணமாக குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் பாகற்காயை தவிர்ப்பது உண்டு. ஆனால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள முறையில் ஒரு முறை பாகற்காய் வறுவல் செய்து கொடுத்து பாருங்கள். பாகற்காயை விரும்பாமல் தவிர்ப்பவர்கள் கூட விரும்பி சாப்பிடும் அளவிற்கு இது சுவையாக இருக்கும். அந்த வகையில், கசப்பே தெரியாத அளவிற்கு சுவையான பாகற்காய் வறுவல் எப்படி செய்வது என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.

24
பாகற்காய் வறுவல் - தேவையான பொருட்கள்

பாகற்காய் – 250 கிராம்

பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 2

பூண்டு – 10 பல்

மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்

மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

கடுகு – 1/4 ஸ்பூன்

கடலை பருப்பு – 1 1/2 ஸ்பூன்

சமையல் எண்ணெய் – தேவையான அளவு

நல்லெண்ணெய் – சிறிதளவு

கருவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

34
செய்முறை - 1

முதலில் பாகற்காயை ஸ்லைஸாக நறுக்கி, அதை மோரில் ஊறவைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வது பாகற்காயின் கசப்புத்தன்மையை குறைக்க உதவும். அடுத்து அடுப்பில் கடாயை வைத்து மிதமான தீயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு நன்றாக வெடித்ததும் அதில் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பிறகு கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். தொடர்ந்து பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

44
செய்முறை - 2

வெங்காயம் ஓரளவிற்கு வதங்கியதும், பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 2 நிமிடங்கள் நன்றாக வதக்க வேண்டும். மசாலாவின் பச்சை வாசம் போனதும், நறுக்கி வைத்துள்ள பாகற்காயை சேர்த்து மசாலாவுடன் நன்றாக கலக்கும்படி வதக்கவும். பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். அதன்பிறகு நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து சிறிது நேரம் மூடி வைத்து வேகவிடவும். பாகற்காய் நன்றாக வெந்து வதங்கியதும், இறுதியாக சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

அவ்வளவுதான்! கசப்பில்லாத சுவையான பாகற்காய் வறுவல் சாப்பிட ரெடி. இவ்வாறு எண்ணெயில் நன்றாக வதக்குவதால் பாகற்காயின் கசப்புத்தன்மை குறைந்து, அதை சுவையாக சாப்பிட முடியும். பாகற்காயை விரும்பாதவர்களுக்கும் இந்த முறையில் செய்து கொடுத்தால் பிடிக்கும் அளவிற்கு சுவையாக இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories