ஆலிவ் எண்ணெயில் சமைத்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? தெரிஞ்ச ஷாக் ஆவிங்க..

First Published | Aug 22, 2023, 1:05 PM IST

ஆலிவ் எண்ணெய்யில் சமைத்த உணவை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.

ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியத்திற்கு நல்லது. இது அதிகளவு நன்மை பயக்கும் சேர்மங்களை கொண்டுள்ளது. சமையலுக்கு ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. அது என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.
 

மூளை பக்கவாதம்: சமையலில் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துவது மூளை பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றது. இந்த எண்ணெயில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்று பண்புகள் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து மூளையை பாதுகாக்கிறது.

Latest Videos


இரத்த அழுத்தம்: இரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்க ஆலிவ் எண்ணெய் உதவுகிறது. மேலும் இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும்.

இதையும் படிங்க:  Skin Care : சருமத்திலுள்ள சுருக்கங்களை தடுக்க இதை செஞ்சா போதும்..!!

வலியைக் குறைக்கும்: ஆலிவ் எண்ணெயில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இந்த எண்ணெயை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், உடலில் ஏற்படும் நாள்பட்ட அலர்ஜி மற்றும் வலியை குறைக்க உதவுகிறது.

எடை குறைக்க:  உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், இந்த எண்ணெயில் உள்ள மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உங்களை நிறைவாக உணரவைக்கும். பசியின்மை பசியை கட்டுப்படுத்துகிறது. இதனால் எடை கட்டுப்படும்.

இதய ஆரோக்கியம்: ஆலிவ் எண்ணெயில் ஒலிக் அமிலம் உள்ளது. இது இதய நோய் அபாயத்தை தடுக்கிறது. மெந்லும் இது உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.

இதையும் படிங்க: கோடை காலத்தில் உங்கள் கூந்தல் பாதிக்குதா? அப்போ இந்த 5 விதமான எண்ணெய் பயன்படுத்துங்க..!!

நோய் எதிர்ப்பு சக்தி: ஆலிவ் எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ மற்றும் பினாலிக் அமிலம் உள்ளது. இவை சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் பல உடல்நல பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கிறது.

ஜீரணத்திற்கு: ஆலிவ் எண்ணெய் செரிமான மற்றும் செரிமான அமைப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த எண்ணெயில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் குடலில் உள்ள வலி, வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சினைகளை குறைக்கிறது.

மூளைக்கு: ஆலிவ் எண்ணெய்யை தொடர்ந்து உட்கொள்வது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இது அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நரம்பியல் கடத்தல் நோய்களிலிருந்தும் பாதுகாக்கும். மேலும் மூளை வீக்கமும் குறைக்க உதவுகிறது.

click me!