ஆண்களை கம்பீரமாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றும் 8 சிறந்த உணவுகள்!

First Published | May 15, 2023, 5:29 PM IST

பெரும்பாலான ஆண்கள்  வேலைப்பளு காரணமாக தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. அவர்கள் ஆரோக்கியமாக இருக்க சில உணவுகளை சாப்பிட வேண்டுவது நல்லது.

நல்ல உணவுப் பழக்கம் நல்ல ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். பெரும்பாலான ஆண்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஆரோக்கியத்தில் சிறிதும் அக்கறை காட்டுவதில்லை. இதனால் அவர்கள் பல நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். சரியான உணவு மூலம் ஆரோக்கியமான உடலைப் பெறலாம் என்கின்றனர் நிபுணர்கள். இப்போது ஆண்கள் தவறாமல் சாப்பிட வேண்டிய சில உணவுகள் பற்றி பார்ப்போம்.

நார்ச்சத்து:

ஆண்கள் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். ஏனெனில் இது சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கிறது. பசியைக் குறைக்கிறது. இது பைல்ஸ் போன்ற பிரச்சனைகளையும் குறைக்கிறது. 

Tap to resize

ஒமேகா 3:

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உங்கள் உடலுக்கு மிகவும் அவசியமான கொழுப்புகளில் ஒன்றாகும். இவை உடலுக்கும் மனதுக்கும் மிகவும் நல்லது. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளில் மீன் ஒன்று. எனவே மத்தி, சால்மன் போன்ற மீன்களை சாப்பிடுங்கள். 

நட்ஸ்:

தினமும் ஒரு கையளவு நட்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நட்ஸ்கள் ஆரோக்கியமான கொழுப்புகளின் நல்ல மூலமாகும். அவை கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், இதய நோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகின்றன. மேலும், ஆண்கள் தினமும் நட்ஸ் சாப்பிட்டு வந்தால், விந்தணு அதிகரிக்கும். 

விதைகள்:

செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது வலுவான நோயெதிர்ப்பு அமைப்புக்கு அவசியம். இதற்கு, செரிமான அமைப்பில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஆதரிக்கும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை உட்கொள்வது இதய நோய் மற்றும் டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கும். இதற்கு பச்சை பட்டாணி, சியா விதைகள், ஆளி விதைகள், பூசணி விதைகள் போன்றவற்றை சாப்பிடுங்கள். 

முட்டைகள்:
முட்டை ஒரு முழுமையான உணவு. முட்டையில் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தசை வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் ஆண்கள் தினமும் ஒரு முட்டையாவது சாப்பிட வேண்டும். 

இதையும் படிங்க: இரத்த சர்க்கரை குறைக்கனுமா? அப்போ இதை சாப்பிடுங்க..!!

தக்காளி:
தக்காளியில் உள்ள லைசோபின், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் 'சி' போன்ற கூறுகள் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் தக்காளி சாப்பிட்டால் ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் பிரச்சனைகள் தீரும்.

பொட்டாசியம்:
பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதற்கு வாழைப்பழம் மற்றும் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். 
 

கருப்பு சாக்லேட்:

டார்க் சாக்லேட் சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அழுத்தம் குறையும். கெட்ட கொலஸ்ட்ரால் அளவும் குறைகிறது. மேலும் உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.

Latest Videos

click me!