உடல் எடையை கஷ்டப்படாமல் குறைக்க உதவும் 6 இந்திய உணவுகள்!!

Published : Jun 09, 2025, 12:34 PM IST

ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க உதவும் 6 இந்திய சூப்பர் உணவுகளின் பட்டியல் இங்கே.

PREV
17
Best Indian Foods For Weight Loss Fast

இந்த காலத்தில் பலரும் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். இதற்கு காரணம் மோசமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு முறை மற்றும் அதிக உடல் உழைப்பு இல்லாமை. ஆனால் சரியான உணவு முறை கடைப்பிடித்தால் உடல் எடையை சுலபமாக குறைத்துவிடலாம். அதுவும் குறிப்பாக நாம் தினமும் எடுத்துக் கொள்ளும் சில இந்திய உணவுகள் இதற்கு பெரிதும் உதவும். அவற்றை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

27
ராகி :

ராகியில் நார்ச்சத்து, கால்சியம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது. இது எடை இழுப்பு மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ராகி மெதுவாக ஜீரணமாவதால், உங்களது வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும் மற்றும் தேவையில்லாமல் சாப்பிடும் ஆர்வத்தை குறைக்கும். ராகியில் தோசை, இட்லி, சப்பாத்தி போன்ற ஆரோக்கியமான நிறைவான உணவுகளை செய்து சாப்பிடலாம்.

37
மக்கானா :

ஆரோக்கியமான முறையில் எடை குறைக்க மக்கானா சிறந்த தேர்வு. மகானாவில் கலோரிகள் குறைவு, ஆக்ஸிஜனேசிகள் அதிகமாக இருப்பதால் எடையை சுலபமாக குறைத்து விடலாம். ஒரு கைப்பிடி மக்கானாவை நெய்யில் வறுத்து, அதில் சிறிதளவு சாட் மசாலாவை தூவி மதிய உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். இது எடை இழப்பு பயணத்திற்கு ஏற்றது.

47
குதிரைவாலி :

எடை இழப்புக்கு இது உதவும் என்று பலருக்கு தெரியாது. கொழுப்பை எரிக்கும் ஒரு மூலப்பொருள் இதில் உள்ளது. பல இந்திய கிராமங்களில் இது சாப்பிடுவார்கள். குதிரைவாலியில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமாகவே உள்ளன. இதுதவிர இதில் இருக்கும் இரும்பு மற்றும் பாலிபினால்கள் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க பெரிதும் உதவும். இதில் இருக்கும் டையூரி பண்புகள் செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் நீர் தக்க வைப்பை குறைக்கும். குதிரைவாலியில் சூப் போன்ற உங்களுக்கு பிடித்த உணவுகள் செய்து சாப்பிடலாம்.

57
கோகம் பழம் :

கோடை காலத்திற்கு உகந்த பழங்களில் இதுவும் ஒன்றாகும். இதில் கலோரிகள் குறைவாக உள்ளதால், இந்த பழம் எடை இழப்பு பெரிதும் உதவுகிறது என்று சொல்லப்படுகின்றது. ஏனெனில், இது செரிமானத்தை மேம்படுத்தி, அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கும் பசியைக் குறைக்கும், கொழுப்பு சேருவதைத் தடுக்க உதவுகிறது. இதுதவிர வீக்கம் மற்றும் அமிலத்தன்மையை குறைக்கும். இதில் குளிர்ச்சியூட்டும் பண்புகள் உள்ளன. எடை இழப்புக்கு இதை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாம் அல்லது கறி, சட்னி வைத்து சாப்பிடலாம்.

67
கம்பு :

கம்பு பழங்காலத்திலிருந்தே மிகவும் பிரபலமான தானியமாகும். இதில் கரையாத நார்ச்சத்து மற்றும் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளதால், ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். மேலும் இது உங்களது வயிறை மணிக்கணக்கில் நிறைவாக வைத்திருக்கும் மற்றும் பசியைக் தணிக்கும். நீரிழிவு அல்லது இன்சுலின் எதிர்ப்பு போராடுபவர்களுக்கு இது மிகவும் சிறந்தது என்று 2024 ஆம் நடத்தப்பட்ட ஆராய்ச்சி கட்டுரை சொல்லுகிறது. ஆகவே, எடையை குறைக்க உங்களுக்கு பிடித்தவாறு செய்து சாப்பிடுங்கள்.

77
ராஜ்கிரா அல்லது அமரந்த் :

ராஜ்கிரா பல்துறை திறன் கொண்ட ஒரு சூப்பர் தானியமாகும். புரதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இதில் நிரம்பியுள்ளது. இது உங்களது வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். அதே சமயம் கொழுப்பு இழப்புக்கும் உதவுகிறது. இதில் இயற்கையாகவே பசையும் இல்லை மற்றும் ஜீரணிக்க எளிதானது. ஆகவே இதை நீங்கள் ரொட்டி, லட்டு அல்லது உங்களுக்கு பிடித்த வகையில் செய்து சாப்பிடுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories