எந்திரமயமான இன்றைய காலக்கட்டத்தில் உடல் பருமன் அதிகரிப்பது அனைவருக்கும் ஒரு பிரச்சனையாகிவிட்டது. ஒருமுறை உங்களுக்கு உடல் எடை அதிகரித்துவிட்டால் அதைக் குறைப்பது ரொம்ப சிரமம் என சொல்லப்படுகிறது. உடல் கொழுப்பைக் குறைக்க, மக்கள் ஜிம்மில் மணிக்கணக்கில் போராடுகிறார்கள். ஆனாலும் சிலருக்கு உடல் எடையை குறைக்க முடியவில்லை. ஜிம் இல்லாமலேயே உடல் எடையை குறைக்க 5 எளிய குறிப்புகளை பார்க்கலாம் வாங்க...
சுகாதார நிபுணர்கள், நாம் காலையில் வெதுவெதுப்பான நீரை முதலில் அருந்த வேண்டும் என சொல்கிறார்கள். அப்படி செய்தால் உடல் நச்சுத்தன்மையை நீக்கும். இதனால் உடல் எடையை குறையும். புத்துணர்ச்சியுடன் இருக்க எலுமிச்சை சாறு கலந்த வெதுவெதுப்பான நீரையும் குடிக்கலாம்.
காலையில் சூரிய குளியல் (sun bath) உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது. வயிற்றில் படிந்திருக்கும் கொழுப்பும் கொஞ்சம் கொஞ்சமாக குறையுமாம். காலையில் சூரிய ஒளி நம்மீது பட்டால், உடலுக்கு வைட்டமின் டி கிடைக்கிறது. இது உடலின் எலும்புகளையும் பலப்படுத்துகிறது.
ஆரோக்கியமாக இருக்க தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீரை அருந்த வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, தேவையற்ற கொழுப்பு உடலில் சேராது. இதனால் உடல் பருமன் தானாகவே குறைகிறது.