Darkness Around Mouth : வாயை சுற்றி கருப்பா அசிங்கமா இருக்கா? இந்த '2' விஷயம் பண்ணுங்க! ஒரேநாளில் நல்ல மாற்றம்

Published : Sep 26, 2025, 03:46 PM IST

உங்கள் வாயை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் சூப்பரான சிம்பிள் டிப்ஸ்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

PREV
18
Darkness Around Mouth

பொதுவாக பெண்கள் தங்களது முகம் எப்போதுமே அழகாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். ஆனால் சில பெண்களுக்கு வாயை சுற்றி மட்டும் கருப்பாக இருக்கும் இதை மறைப்பதற்காக பலர் அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். நீங்களும் இதே பிரச்சனையை அனுபவிக்கிறீர்களா? அப்படியானால் நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து கருமையை சுலபமாக போக்கிவிடலாம். இதனால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. சரி இப்போது இந்த பதிவில் வாயை சுற்றி இருக்கும் கருமையை நீக்க உதவும் சூப்பரான சில வீட்டு குறிப்புகள் பற்றி பார்க்கலாம்.

28
வாயை சுற்றி கருமை இருக்க காரணங்கள் :

வாயை சுற்றி கருமை ஏற்படுவதற்கான காரணம் ஹைப்பர் பிக்மென்டேஷன் என்று கூறப்படுகிறது. இது தவிர ஹார்மோனில் ஏற்றத்தாழ்வுகள், அதிகப்படியான சூரிய ஒளி மற்றும் மோசமான சரும பராமரிப்பு போன்ற பல காரணங்கள் இதில் அடங்கும்.

38
எலுமிச்சை சாறு

வாயை சுற்றி இருக்கும் கருமையை நீக்க எலுமிச்சை பழம் சிறந்த தேர்வாகும். எலுமிச்சை பழத்தில் இருக்கும் சிட்ரிக் அமிலம் கருமையை நீக்கி, அந்த பகுதியை ஒளிரச் செய்யும். மேலும் மீண்டும் கருப்பாக மாறுவதைத் தடுக்கும். இதற்கு ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதன் ஒரு பகுதியை வாயை சுற்றி இருக்கும் கருமை மீது நன்றாக சுமார் 5 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். வேண்டுமானால் எலுமிச்சை துண்டில் சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளலாம். இப்படி தினமும் செய்து வந்தால், கருமை பகுதியில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி சருமத்தில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.

48
தக்காளி சாறு

இதற்கு ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் தக்காளி சாறுடன், 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து அதை வாயை சுற்றி இருக்கும் கருமை மீது தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். இப்படி வரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால் வாயை சுற்றியிருக்கும் கருமை முற்றிலும் நீங்கிவிடும்.

58
தேன் மற்றும் எலுமிச்சை

ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் தேனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து அதை இரவு தூங்கும் முன் வாயில் சுற்றி இருக்கும் கருமை மீது தடவி இரவு முழுவதும் அப்படியே வைத்து விட்டு பிறகு மறுநாள் காலை குளிர்ந்த நீரில் கழுவவும். இப்படி தினமும் செய்து வந்தால் வாயை சுற்றி இருக்கும் கருமை மறைந்துவிடும்.

68
உருளைக்கிழங்கு சாறு

இதற்கு ஒரு கிண்ணத்தில் உருளைக்கிழங்கு சாற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பருத்தி உருண்டையை அதில் நனைத்து வாயை சுற்றி இருக்கும் கருமை மீது தடவி இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட்டு பிறகு மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவவும். இப்படி தினமும் செய்து வந்தால் சீக்கிரமாகவே கருமை முற்றிலும் மறைந்துவிடும்.

78
பீட்ரூட் சாறு

இதற்கு ஒரு கிண்ணத்தில் பீட்ரூட் சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பஞ்சு உருண்டையை அதில் நனைத்து இரவு தூங்கும் முன் வாயை சுற்றி இருக்கும் கருமை மேலே தடவி இரவு முழுவதும் அப்படியே வைத்து விட்டு பிறகு மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் அல்லது வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தாலே போதும். கருமை நீங்கிவிடும். பாதிக்கப்பட்ட பகுதியும் வெள்ளையாகிவிடும்.

88
மஞ்சள்

இதற்கு மஞ்சள் மற்றும் ரோஸ் வாட்டர் ஒன்றாக கலந்து அந்த பேஸ்ட்டை வாயை சுற்றி இருக்கும் கருமை மீது தடவி 10 நிமிடங்கள் கழித்து சூடான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் கருமை நீங்கி பிரகாசமாகிவிடும்.

Read more Photos on
click me!

Recommended Stories