Health Tips for Bride: திருமணமாகப் போகும் பெண்கள் 3 மாதத்திற்கு முன்பே தங்களது சருமம், உடல் நலத்திற்கு ஏற்ப தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். திருமணத்திற்குத் தயாராகும் பெண்களுக்கான சருமப் பராமரிப்பு பற்றி 5 எளிய குறிப்புகள் பார்ப்போம்.
திருமணப் புகைப்படங்களில் அழகாகத் தெரிய சருமம் முழுமையாகக் குறைகளற்று இருக்கத் தேவையில்லை. கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் மேக்கப் போடும்போது வெளியே தெரியாத அளவிற்கும், புதிய முகப்பருக்கள் வராமலும் பார்த்துக்கொண்டாலே போதுமானது.
25
சரியான நேரத்தில் பராமரிப்பைத் தொடங்குங்கள்
சாதாரணச் சருமம் கொண்டவர்கள் திருமணத்திற்குக் குறைந்தது 3 மாதங்களுக்கு முன்பிலிருந்தே சருமப் பராமரிப்பைத் தொடங்க வேண்டும். முகப்பரு, தழும்புகள் அல்லது பெரிய சருமத் துளைகள் இருப்பவர்கள் குறைந்தது 6 மாதங்களுக்கு முன்பே சிகிச்சைகளைத் தொடங்குவது நல்லது.
35
தினசரி அடிப்படைப் பராமரிப்பு
தினமும் முகத்தைச் சுத்தம் செய்வது, ஈரப்பதத்துடன் வைப்பது மற்றும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும்.
சிறப்புப் பராமரிப்பு மற்றும் வாராந்திரப் பராமரிப்பு
தினசரி பராமரிப்பில் நியாசினமைடு, ஆல்பா அர்புடின், மற்றும் ஹைலூரோனிக் அமிலம் ஆகியவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம். மேலும், வாரத்திற்கு ஒருமுறை சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க 'எக்ஸ்ஃபோலியேட்' செய்ய வேண்டும்.
55
ஷாப்பிங் நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் கவனம்
திருமண ஷாப்பிங்கிற்காக வெளியே அலையும்போது பசி எடுத்தால், கடைகளில் விற்கும் அதிக சர்க்கரை நிறைந்த பழச்சாறுகளைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, எப்போதும் கையில் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்திருந்து நீர்ச் சத்துக் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன; உங்களது சரும வகைக்கு ஏற்ற சிகிச்சைகளைத் தொடங்குவதற்கு முன் தகுந்த சரும நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.