பொதுவாக நாம் எல்லோருமே முகத்தில் கறைகள், கரும்புள்ளிகள், பருக்கள், தழும்புகள் இல்லாமல் இருப்பது தான் விரும்புவோம். ஆனால் சூரிய ஒளி, வியர்வை, தூசி, அழுக்கு போன்ற பல காரணங்களால் இவை முகத்தில் தோன்றத் தொடங்குகின்றன. சில சமயங்களில் முகத்தில் ஏற்படும் பருக்கள் கரும்புள்ளிகளாக மாறி முகத்தின் அழகை கெடுக்கின்றன.
முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் போக்க பலர் மருத்துவ சிகிச்சைகள் மற்றும் அழகு சாதன பொருட்களை நாடுகின்றனர். ஆனால் இவற்றிற்கு பதிலாக இயற்கை முறையில் முகத்தில் இருக்கும் வடுக்கள் மற்றும் கரும்புள்ளிகளை போக்கலாம். இதற்கு உங்களுக்கு தேங்காய் எண்ணெய் உதவும்.
26
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் கூந்தலில் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, பல சரும பிரச்சனைகளையும் சரி செய்யவும் உதவும். தேங்காய் எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு, ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை சருமத்தை மென்மையாகவும், இறந்த சரும செல்களை அகற்றவும் உதவுகின்றது. அதுமட்டுமின்றி, முகப்பரு மற்றும் தோல் பதனிடுதல் பிரச்சனைகளை குறைக்கவும், முகத்தில் இருக்கும் வடுக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்கி முகத்தை சுத்தமாக்கவும், கறைகள் ஏதுமில்லாமல் மாற்றவும் உதவுகிறது. இதற்கு தேங்காய் எண்ணெயில் சில பொருட்களை மட்டும் கலந்து பயன்படுத்தினால் போதும். அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
36
தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள்
மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெயில் கிருமி நாசினி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை முகத்தில் உள்ள வீக்கம், முகப்பரு மற்றும் தழும்புகளை நீக்க உதவும். இதற்கு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்து அதை முகத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு முகத்தை கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகப்பரு குறையும், கரும்புள்ளிகள் மறையும். மேலும் சருமத்தின் நிறம் மேம்படும்.
கற்றாழை ஜெல் சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது மற்றும் சருமத்தை மென்மையாகவும் மாற்றும். இதற்கு ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் உடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து அதை இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி பிறகு மறுநாள் காலை முகத்தை கழுவ வேண்டும்.
56
தேங்காய் எண்ணெய் மற்றும் தேன்
தேங்காய் எண்ணெய் மற்றும் தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளன. இது சரும வறட்சியை போக்கி, சருமத்திற்கு பளபளப்பை தரும். இதை பயன்படுத்த தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் இரண்டையும் சம அளவு எடுத்து முகத்தில் தடவி நன்கு காய்ந்த பிறகு சூடான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
66
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு இவை இரண்டும் நிறமியை குறைத்து சருமத்தை பளபளப்பாக மாற்ற உதவும். இதற்கு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அது முகத்தில் தடவி சுமார் 15 நிமிடம் அப்படியே வைத்துவிட்டு பிறகு முகத்தை கழுவ வேண்டும். இதை பயன்படுத்தி பிறகு வெயிலில் ஒருபோதும் செல்லக்கூடாது என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.