வறண்ட கூந்தல், முடி உடைதல் மற்றும் முடி மெலிந்து போதல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு முருங்கை எண்ணெய் ஒரு சிறந்த தீர்வாகும்.
3 தேக்கரண்டி சுத்தமான முருங்கை எண்ணெயை லேசாக சூடுபடுத்திக் கொள்ளவும்.
கூந்தலை பிரித்து, மண்டை ஓட்டில் நேரடியாக படும்படி தேய்க்கவும்.
10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து, ஒரு மணி நேரம் அப்படியே ஊற வைக்கவும்.
பிறகு வீரியம் குறைந்த (Mild) ஷாம்பு மற்றும் கண்டிஷனர் கொண்டு முடியை அலசவும்.
தொடர்ந்து 3 வாரங்கள் பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை நீங்கள் காண முடியும். எப்போதும் முடியின் நுனிகளை விட வேர்ப்பகுதியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.