Natural Face Pack: காஸ்ட்லி க்ரீம் எதுக்கு? இந்த ஹோம்மேட் பேக் போடுங்க... இனி நீங்கதான் உலக அழகி!

Published : May 09, 2026, 02:17 PM IST

எல்லாருக்கும் முகம் பளபளன்னு, வெள்ளையா இருக்கணும்னு ஆசை இருக்கும். அதுக்காக காஸ்ட்லியான பியூட்டி புராடக்ட்ஸ் வாங்கிப் பயன்படுத்துவோம். ஆனா, எந்த பக்கவிளைவும் இல்லாம, நம்ம வீட்டுல இருக்குற பொருள்களை வெச்சே முகத்தை அழகாக்கலாம்னு உங்களுக்குத் தெரியுமா

PREV
14
கடலை மாவு - மஞ்சள் ஃபேஸ் பேக்
கடலை மாவு இருக்கா?
ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவு, 2 ஸ்பூன் மஞ்சள், 1 ஸ்பூன் சந்தனப் பொடி, பாதி எலுமிச்சை சாறு சேர்த்துக்கோங்க. வறண்ட சருமம் என்றால் பால், எண்ணெய் சருமம் என்றால் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் ஆக்குங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் 20 நிமிடம் வைத்துவிட்டு கழுவவும். உங்கள் சருமம் மிகவும் வறண்டிருந்தால், ஃப்ரெஷ் க்ரீம் கூட சேர்க்கலாம்.
24
பளபளப்பாகும் பப்பாளி
ஒரு கப் நறுக்கிய பப்பாளி, 2 ஸ்பூன் பால், 1 ஸ்பூன் தேன் மூன்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணுங்க. இதை முகத்தில் நன்றாகத் தடவி 15-20 நிமிடம் அப்படியே விடுங்கள். அதன் பிறகு முகத்தைக் கழுவிவிட்டு மாய்ஸ்சரைசர் போடுங்கள்.
34
தக்காளி மினமினுப்பு
ஒரு பாத்திரத்தில் பாதி தக்காளி சாறு, கால் பங்கு துருவிய வெள்ளரி இரண்டையும் நன்றாகக் கலக்குங்கள். இந்தக் கலவையை பஞ்சு வைத்து முகத்தில் தடவி, 15-20 நிமிடம் காய விடுங்கள். காய்ந்ததும், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி, டவலால் துடைத்துக்கொள்ளுங்கள்.
44
வறட்சியைப் போக்க உதவும்
2 ஸ்பூன் ஓட்ஸை வேக வைத்துக்கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் பால் மற்றும் 4 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேருங்கள். ஆறியதும், இந்த பேஸ்ட்டை 20 முதல் 25 நிமிடம் முகத்தில் அப்ளை பண்ணுங்கள். இது சரும வறட்சியைப் போக்க உதவும்.
Read more Photos on
click me!

Recommended Stories