Onion Juice for Hair Growth : கூந்தல் வளர்ச்சிக்கு 'வெங்காயம்' சாறு தடவும்போது வாசனை இல்லாம இருக்கனுமா? இந்த ட்ரிக் யூஸ் பண்ணுங்க..!

Published : Jan 03, 2026, 04:26 PM IST

தலைமுடியில் வெங்காய சாறு பயன்படுத்தினால் வாடை அடிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டிய சில டிப்ஸ்கள் இங்கே.

PREV
16
Onion Juice for Hair Growth

ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு பெரும்பாலானோர் முடிக்கு வெங்காய சாற்றை பயன்படுத்துகின்றனர். வெங்காய சாற்றில் இருக்கும் சர்பர் என்னும் பண்பு தான் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. ஆனால், ஷாம்பு போட்டு குளித்த பிறகும் இதன் மோசமான வாடை தலைமுடியில் அடிப்பதால் சிலர் இதை தவிர்க்கிறார்கள். ஆனால் வெங்காய சற்றில் சில பொருட்களைக் கலந்து பயன்படுத்தினால் வாடை அடிக்காது. மணம் வீசும். அவை என்னென்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

26
ரோஸ் வாட்டர் :

வெங்காய சாற்றில் சிறிதளவு ரோஸ் வாட்டர் கலந்து பயன்படுத்தினால் முடியில் வாடை அடிப்பது குறையும். நல்ல மணம் வீசும்.

36
கற்றாழை ஜெல் :

கற்றாழை ஜெல்லானது வாடயை குறைக்கும், உச்சந்தலை எரிச்சலை தணிக்கும், அரிப்பை நீக்கும், கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் முடியை பட்டுப்போல மென்மையாக மாற்றும் எனவே இதை வெங்காயம் சாற்றுடன் தாராளமாக பயன்படுத்தலாம்.

46
விளக்கெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் :

வெங்காய சாறில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்து பயன்படுத்தலாம். இவை ஊட்டச்சத்துக்களை தக்க வைக்கும் மற்றும் வாடையை குறைக்கும்.

56
அத்தியாவசிய எண்ணெய் :

வெங்காயம் சாறில் சிறிதளவு லாவண்டர் எண்ணெய் அல்லது ரோஸ்மேரி ஆயில் சேர்க்கலாம். இது வாடையை குறைப்பது மட்டுமல்லாமல் முடி வளர்ச்சிக்கும் மிகவும் நன்மை பயக்கும்.

66
நினைவில் கொள்:

உச்சந்தலையில் தேய்த்தல்..

கூந்தல் வளர்ச்சிக்கு வெங்காய சாற்றை உச்சந்தலையில் மட்டும் தடவினால் போதும். முடி முழுவதும் தடவுவதை தவிர்க்கவும். இதனால் வாடை அடிப்பது ஓரளவு குறையும்.

அதிக நேரம் வைக்காதே!

உச்சந்தலையில் வெங்காய சாற்றை சுமார் 20 நிமிடம் வைத்தாலே போதுமானது. நீண்ட நேரம் வைத்தால் வாடை மோசமாக அடிக்கும். 20 நிமிடங்கள் கழித்து சல்பேட் இல்லாத மைல்டு ஷாம்புவை பயன்படுத்துங்கள். வாடையை முழுமையாக நீக்கிவிடும்.

Read more Photos on
click me!

Recommended Stories