
பளபளப்பான, ஆரோக்கியமான முடிக்கு ஹேர் கேர் மட்டும் போதாது, சரிவிகித உணவு ரொம்ப முக்கியம். புரோட்டீன், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைஞ்ச உணவுகள் முடியோட வலிமை, வளர்ச்சி, பளபளப்பை அதிகரிக்கும்.
Egg Cholesterol : முட்டை மஞ்சள் கரு கொலஸ்ட்ராலை அதிகரிக்குமா? ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிடலாம்?
முடி ஆரோக்கியமா வளரணும்னா அதுக்குத் தேவையான சத்துக்கள் அவசியம். சரிவிகித உணவு சாப்பிடுறது மூலமா முடி வளர்ச்சியை அதிகப்படுத்தலாம். முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்னனு பார்க்கலாம்.
Rice Water : அரிசி கழுவிய நீரை வீணாக கொட்டுறீங்களா? இதுக்கு எவ்வளவு பயன்பாடுகள் இருக்குனு தெரியுமா?
முட்டை சாப்பிடுவது முடியை வலுவாக்கி, பளபளப்பைக் கொடுக்கும். முடி உடைவதையும் குறைக்கும். இதில் இருக்கும் புரோட்டீன், முடியில் உள்ள பலவீனமான பகுதிகளை சரிசெய்யும். முட்டை மஞ்சள் கருவில் உள்ள கொழுப்பு, வறண்ட முடிக்கு ஈரப்பதம் தரும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வேர்க்கால்களுக்கு ஊட்டமளித்து, உச்சந்தலையை ஆரோக்கியமாக வைக்கும்.
கீரை வகைகளில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் ஏ, சி போன்றவை நிறைந்துள்ளன. இவை முடி செல்களுக்கு ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிக்கின்றன. குறிப்பாக கீரை, முடி வேர்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை மேம்படுத்தி, முடி உடைவதைக் குறைத்து, உச்சந்தலையில் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகிறது.
USA Salary : அமெரிக்காவில் பாத்ரூம் கழுவினாலே கோடீஸ்வரர் ஆகிடலாமா? அட்ரா சக்கை!
சர்க்கரைவள்ளி கிழங்கில் பீட்டா-கரோட்டின் அதிகமா இருக்கு. நம்ம உடல் இதை வைட்டமின் ஏ-வாக மாற்றி, உச்சந்தலையை ஆரோக்கியமாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவும். இது செல் வளர்ச்சி, உச்சந்தலையில் இயற்கையான எண்ணெய் சுரப்பு, வேர்களின் வலிமை ஆகியவற்றுக்கு உதவுகிறது.
மழைக்காலத்துல துணி சீக்கிரம் காயணுமா? பழைய நியூஸ்பேப்பர வச்சு ஒரு சூப்பர் ட்ரிக்!
சால்மன், அயல போன்ற கொழுப்புள்ள மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் வைட்டமின் டி உள்ளது. இது உச்சந்தலையில் ஏற்படும் அழற்சியைக் குறைத்து, மயிர்க்கால்களின் (follicles) ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
Guru Peyarchi : ஆயில்ய நட்சத்திரத்திற்கு மாறும் குரு பகவான்! 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் உறுதி!
நட்ஸ் சாப்பிடுவது முடி வளர்ச்சிக்கு உதவும். இதில் பயோட்டின், வைட்டமின் ஈ, ஒமேகா-3, ஜிங்க் போன்ற சத்துக்கள் உள்ளன. வால்நட், பாதாம், பிரேசில் நட்ஸ் போன்றவை சிறந்தவை. தினமும் 25 முதல் 30 கிராம் வரை உப்பு சேர்க்காத நட்ஸ் சாப்பிடுவது வேர்களை வலுப்படுத்தி, உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
Mixer-Grinder : மிக்ஸி ஜாரின் Blade மழுங்கிவிட்டதா? புதிய Blade வாங்கும் முன் இதை செஞ்சு பாருங்க!