தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று டான்ஸ் ஜோடி டான்ஸ், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை ஆர்.ஜே விஜய் தொகுத்து வழங்கி வந்தார். மேலும் நடுவர்களாக பாபா பாஸ்கர் மாஸ்டர், சங்கீதா மற்றும் சினேகா ஆகியோர் கலந்து கொண்டனர். 10 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் பாப்புலராகி கலக்கி வந்தது.