
யூடியூப்பை திறந்தாலே பிரியாணி மேன் பற்றிய பேச்சுக்கள் தான். அவர் தற்கொலை செய்துகொள்ள முயன்ற வீடியோ வெளியாகி வைரலான நிலையில், அவர் அந்த முடிவு எடுக்கும் அளவுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி பார்க்கலாம்.
முதலில் யார் இந்த பிரியாணி மேன் என்பதை பார்க்கலாம். இவர் ஒரு யூடியூப்பர். யூடியூப்பில் அசிங்க அசிங்கமாகவும் பிறரைப்பற்றி கேவலமாகவும், வன்மத்துடனும் வீடியோ வெளியிட்டு வருபவர் தான் இந்த பிரியாணி மேன். இவரின் ஒரிஜினல் பெயர் அபிஷேக். இவரின் சமீபத்திய டார்கெட் யூடியூப்பர் இர்பான் மற்றும் டெயிலர் அக்கா தான்
இதில் யூடியூபர் இர்பானைப் பற்றியும் அவர் சிக்கிய சர்ச்சைகளை விமர்சித்தும் பேசி இருந்தார் பிரியாணி மேன். குறிப்பாக இர்பான் ரிவ்யூ செய்யும் பிரபல உணவகங்களில் தரமற்ற உணவுகள் விநியோகம் செய்யப்படுவதாகவும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அங்கு சோதனை செய்ததையும் சுட்டிக்காட்டி பேசி இருந்தார்.
இதேபோல் மறைமலைநகரின் மூதாட்டி ஒருவர் மீது இர்பானின் கார் மோதியதில் அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த வழக்கில் தனக்கு இருக்கும் பண பலத்தை வைத்தும், சட்டத்தில் இருக்கும் ஓட்டைகள் வழியாக தப்பியதாகவும் கூறி உள்ளார். மேலும் இந்த விஷயத்தில் அமைச்சர் உதயநிதி மற்றும் எம்பி கனிமொழி ஆகியோர் இர்பானை காப்பாற்ற வாய்ப்பில்லை எனக்கூறிய பிரியாணிமேன், நெப்போலியன் மற்றும் ஆர்.என்.ரவி புகைப்படங்களை குறிப்பிட்டு அவர்கள் மறைமுகமாக இர்பானுக்கு ஆதரவு அளித்திருப்பதாக குற்றம் சாட்டினார்.
இதையும் படியுங்கள்... யூடியூப் லைவில் திடீரென தற்கொலைக்கு முயன்ற பிரியாணி மேன் - பதறிய தாய்; பதைபதைக்கும் வீடியோ
இர்பான் ரிவ்யூ செய்த ரோட்டுக்கடைகளில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக கூறிய பிரியாணி மேன், ஒருகட்டத்தில் இர்பானின் மதத்தை சுட்டிக்காட்டியும் விமர்சனம் செய்திருந்தார். பிரியாணி மேனின் எல்லை தாண்டிய விமர்சனத்தை பார்த்து கொத்தித்தெழுந்த இர்பான், பிரியாணி மேன் ஒரு கடைந்தெடுத்த தற்குறி என்று சாடியதோடு, அவரை Roast செய்யும் வீடியோ வாயிலாக தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்துடன் பதிலடி கொடுத்தார்.
பின்னர் சோசியல் மீடியாவில் டிரெண்டிங் குயினாக வலம் வரும் டெயிலர் அக்காவை வம்பிழுக்கும் விதமாக வீடியோ வெளியிட்ட பிரியாணி மேன், அவர் பிளவுஸ் வீடியோ என்கிற பெயரில் ஆபாச வீடியோ போடுவதாக சாடியதோடு, அவர் மோசடி செய்து வருவதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதற்கு டெயிலர் அக்கா சார்பில் எந்தவித பதிலடியும் கொடுக்காவிட்டாலும் அவரின் ரசிகர்களில் ஒருவரான யூடியூபர் ஏ2டி, பிரியாணி மேன், டெயிலர் அக்கா மீது வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் புருடா என விளக்கி வீடியோ வெளியிட்டார்.
இப்படி பாப்புலாரிட்டிக்காக பிறரை தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிடும் பிரியாணி மேன், நேற்று யூடியூப் நேரலையில் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக துப்பட்டா ஒன்றை எடுத்துக்கொண்டு வந்து வீடியோவில் அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் அவரின் தாய் வந்து அவரை காப்பாற்றிவிட்டார். இந்த வீடியோ வைரலான பின்னர் பிரியாணி மேன் மீதுள்ள அனுதாபத்தை வெளிப்படுத்தி வரும் பதிவுகளை விட, அவரை சாடி வரும் பதிவுகள் தான் அதிகமாக உள்ளன. அவர் கண்டெண்ட்டுக்காகவே இப்படி தற்கொலை செய்வது போல் நடிப்பதாகவும், அவர் தூக்கு மாட்டிக் கொள்ள முயன்றது முதல், அவரது தாய் வந்து காப்பாற்றியதுவரை எல்லாமே ஸ்கிரிப்ட் தான் என்றும் விமர்சித்து வருகின்றனர். சமூகத்தில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது, தேவையில்லாத கருத்துக்களை சமூகத்தில் பரப்பிக் கொண்டிருக்கும் இதுபோன்ற யூடியூபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... இதெல்லாம் ரொம்ப ஓவர்! சரக்கடித்துக்கொண்டு... கையில் சைடிஷுடன் மது பிரியர்களுடன் அட்வைஸ் கூறிய ஓவியா!