அந்த வகையில் இப்பொது சென்னை மிக்ஜாம் புயலால் பெரும் இன்னல்களை சந்தித்து வரும் நேரத்தில், ரம்யா போட்ட பதிவு ஒன்று பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் போட்ட இன்ஸ்டா ஸ்டோரி ஒன்றில், "என் தாய் வீடு என்னை கைவிட்டு விட்டது, என் இரண்டாம் தாய் வீடு என்னை காக்கின்றது" என்று கூறி அந்த ஸ்டோரியில் எழுதியுள்ளார். மேலும் அவர் விமானத்தில் செல்லும் போட்டோ ஒன்றையும் இணைத்துள்ளார்.
அவர் தெலுங்கானா செல்வதாகவும் அதில் கூறியுள்ளார், இதை கண்ட இணையவாசிகள், உங்களுக்கு இவ்வளவு பெரிய புகழை தேடித்தந்தது சென்னை தான், இன்று நீங்கள் வாழும் வாழ்க்கையை உங்களுக்கு கொடுத்தது சென்னை தான். அப்படி இருக்க, வாழ்வளித்த இடத்தை இப்படி கூறிவிட்டு செல்வது எந்த விதத்தில் நியாயம். வெள்ளம் வடிந்ததும் நீங்கள் மீண்டும் இங்கு தான் வரவேண்டும் என்று கூறி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.