Good Night Movie Director Vinayak chandrasekaran Marriage : குட் நைட் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி வெற்றிகண்ட இயக்குனர் விநாயக் சந்திரசேகரனின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமாவுக்கு 2023-ம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. அதற்கு முக்கிய காரணம், டாடா முதல் போர் தொழில் வரை ஏராளமான சின்ன படங்கள் மாஸ் ஹிட் அடித்தன. அந்த வரிசையில் கடந்த ஆண்டு வெளியாகி அதிரி புதிரியான வெற்றியை ருசித்த படங்களில் குட் நைட் படமும் ஒன்று. இப்படத்தில் மணிகண்டன் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக மீதா ரகுநாத் நடித்திருந்த இப்படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்கி இருந்தார்.
24
Good Night Movie Director vinayak wedding
குறட்டையால் ஒரு மனிதனின் வாழ்வில் என்னென்ன சிக்கல்கள் ஏற்படுகின்றன என்பதை யதார்த்தமான திரைக்கதையுடன் மிகவும் அழகாக காட்சிப்படுத்தி இருந்தது இந்த குட் நைட் திரைப்படம். இப்படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலம் சேர்த்தது ஷான் ரோல்டனின் இசை மற்றும் பாடல்கள் தான். இப்படிப்பட்ட ஒரு மாஸ்டர் பீஸ் படத்தை கொடுத்த விநாயக் சந்திரசேகரனுக்கு இதுதான் முதல் படமாகும். இப்படத்திற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளன.
குட் நைட் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கதை சொல்லி இருக்கிறார் விநாயக் சந்திரசேகரன். சிவாவுக்கும் அந்த கதை பிடித்துப் போனதால் அவரும் நடிக்க ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த கூட்டணியில் ஒரு படம் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி சினிமாவில் நல்ல நல்ல விஷயங்கள் விநாயக்கிற்கு நடப்பது போல், ரியல் லைஃபிலும் அவருக்கு ஒரு நல்ல விஷயம் நடந்துள்ளது. அது தான் திருமணம்.
44
Good Night Movie Team at Vinayak chandrasekaran Marriage
விநாயக் சந்திரசேகரனுக்கு நேற்று சைலண்டாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவர் பிரியா என்பவரை கரம்பிடித்து இருக்கிறார். இவர்களது திருமணத்தில் குட் நைட் பட ஹீரோ மணிகண்டன் மற்றும் நடிகர் ரமேஷ் திலக் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி உள்ளனர். மேலும் விநாயக் சந்திரசேகரனின் திருமண புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.