விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷனுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா? முதல்முறையாக வெளியான புகைப்படம்

Published : Jan 12, 2024, 09:55 AM ISTUpdated : Jan 12, 2024, 09:57 AM IST

விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் ரக்‌ஷன், அவரது மகளின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

PREV
16
விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷனுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா? முதல்முறையாக வெளியான புகைப்படம்
Rakshan

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் 5-வது சீசன் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் ரக்‌ஷன். இவர் ஜாக்குலின் உடன் சேர்ந்து தொகுத்து வழங்கிய அந்த சீசன் வேறலெவல் ஹிட் அடித்தது. அதில் இவர்கள் இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்கிய விதம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இதனால் அடுத்தடுத்த சீசன்களையும் இவர்களே தொகுத்து வழங்கினர்.

26
Rakshan Wife

ஒருகட்டத்தில் ரக்‌ஷனும், ஜாக்குலின் காதலிப்பதாக வதந்திகளும் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. அதன் பின்னர் ரக்‌ஷனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்ட தகவல் வெளியான பின்னர் தான் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டன. அதுவும் அவருக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது என்பது தான் மற்றுமொரு ஆச்சர்ய தகவல்.

இதையும் படியுங்கள்... அயலான் vs கேப்டன் மில்லர்... பொங்கல் ரேஸில் மிரட்டியது யார்? சொதப்பியது யார்? டுவிட்டர் விமர்சனம் இதோ

36
Rakshan Daughter

ரக்‌ஷன் விஜேவாக மட்டுமின்றி சினிமாவிலும் கலக்கி வருகிறார். அவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மானின் நண்பனாக நடித்து அசத்தி இருந்தார். அப்படத்துக்கு பின்னர் அவருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

46
Rakshan Daughter Eeneya

அதன்படி தற்போது மறக்குமா நெஞ்சம் என்கிற திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். பள்ளி பருவத்தை நினைவு கூறும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் வருகிற பிப்ரவரி 2-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரக்‌ஷன்.

56
Rakshan Daughter Birthday

இப்படி பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ரக்‌ஷன், முதன்முறையாக தனது மகளின் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். அவர் தனது மகள் இனியாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என வாயடைத்துப் போய் உள்ளனர்.

66
VJ Rakshan Daughter

சிலரோ உங்களுக்கு திருமணம் ஆனதையே நம்ப முடியவில்லை. இதில் இவ்வளவு பெரிய மகள் வேறையா என ஆச்சர்யத்துடன் கேட்டு வருகின்றனர். ரக்‌ஷன் போட்டுள்ள அந்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... சன் டிவி முக்கிய சீரியலில் இருந்து திடீர் என விலகிய ஹீரோ..! அதிர்ச்சி காரணத்தால் பதறிய ரசிகர்கள்..!

click me!

Recommended Stories