Ponni: விஜய் டிவி சீரியலில் இருந்து அதிரடியாக வெளியேறிய பிரபல நடிகை! இனி அவருக்கு பதில் இவர் தான்!

First Published | Nov 8, 2023, 12:09 PM IST

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், முக்கிய தொடரில் இருந்து... பிரபல நடிகை விலகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

வித்தியாசமான கதை களத்தில் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் தங்களின் ஆதரவை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். தொலைக்காட்சியில் பார்க்க முடியாமல் மிஸ் செய்தவர்கள் கூட, தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில்... டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தலங்களுக்கு சென்று சீரியல்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளை பார்க்கின்றனர்.

அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் துவங்கப்பட்ட சீரியல் பொன்னி. வெற்றிகரமாக 160 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகியுள்ள இந்த தொடர் பெங்காலியில் பிரபலமான Gaatchora என்ற சீரியலின் தமிழ் ரீமேக்காக எடுக்கப்பட்டு வருகிறது.

உலக நாயகன் கமல்ஹாசனை லியோ படக்குழுவுடன் சென்று சந்தித்த விஜய்..! வைரலாகும் புகைப்படம்..!

Tap to resize

மனோஜ் குமார் என்பவர் இயக்கி வரும் இந்த தொடரில், ராஜா ராணி 2 சீரியல் மூலம் பிரபலமான வைஷு சுந்தர் ஹீரோயினாக நடிக்கிறார். ஹீரோவாக சபரிநாதன் நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில், ஷமிதா ஸ்ரீகுமார், சூப்பர் குட் கண்ணன், ஈஸ்வர் ரகுநாதன், வருண் உதய், ஸ்ரீதேவி அசோக் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்நிலையில் இந்த சீரியல், ஹீரோவுக்கு அம்மாவாக (ஜெயலட்சுமி) கதாபாத்திரத்தில்  நடித்து வரும் ஷமிதா ஸ்ரீ குமார் அதிரடியாக இந்த தொடரில் இருந்து விலகி விட்டதாகவும், இனி அவருக்கு பதில், சிந்துஜா என்பவர் தான் ஜெயலட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்கள் பலர் ஷமிதா ஏன், விலகினார் என்கிற கேள்வியை முன்வைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாளுக்கு ராஜ விருந்து வைத்த கமல்ஹாசன்! நாவில் எச்சில் ஊறவைக்கும் எக்கச்சக்க ஐட்டம்ஸ்.. ஃபுல் மெனு இதோ!

Latest Videos

click me!