உலக நாயகன் கமல்ஹாசனை லியோ படக்குழுவுடன் சென்று சந்தித்த விஜய்..! வைரலாகும் புகைப்படம்..!
உலக நாயகன் கமல் ஹாசனை, தளபதி விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து கூறியபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில், பிள்ளையார் சுழி போட்ட.. கமல்ஹாசன் இன்று உலக நாயகனாக அறியப்பட்டு, இந்த உலகையே தன்னை திரும்பி பார்க்க வைத்துள்ள உச்ச நட்சத்திரமாக மாறியுள்ளார். இவரின் பர்சனல் வாழ்க்கையில் ஆயிரம் ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும், ஒருபோதும் அந்த பிரச்சனைகள் தன்னுடைய கலையுலக வாழ்க்கையை பாதிக்கும் வண்ணம் அவர் விட்டதில்லை.
தொண்டையை அடைக்கும் துக்கம் இருந்தாலும், உடல் முழுதும் வலித்தாலும், தூக்கத்தில் கண்கள் இருட்டிக்கொண்டு வந்தாலும், நடிப்பு என வந்தால், மிகவும் உற்சாகமாக மாறிவிடும் மஹா கலைஞன் தான் கமல்ஹாசன். இந்த கால இளம் நடிகர்களுக்கு வழிகாட்டி என்று சொன்னாலும் அது மிகையல்ல.
Director Arputhan Death: அதிர்ச்சி... பிரபல இயக்குனர் விபத்தில் சிக்கி மரணம்!
கலையுலகில் கிரீகிடத்தை சூடி கொண்டிருந்தாலும், மக்கள் தான் முக்கியம் என 'மக்கள் நீதி மய்யம்' என கட்சியை துவங்கி, வருங்காலத்தில் கரப்ஷனை ஒழிக்க பாடுபட்டு வருகிறார்.
இவர் மட்டும் அல்ல விரைவில், தளபதி விஜய்யும் அரசியலில் கால் பதிக்க தயாராக உள்ள நிலையில், தற்போது... ஒரே கருத்தில் பின்னி பிணைந்துள்ள இரு நட்சத்திரங்களும் இன்று சந்தித்துக்கொண்டுள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இன்று தன்னுடைய 69-ஆவது பிறந்தநாளை கொண்டாடும், கமல்ஹாசனை, லியோ படக்குழுவை சேர்ந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித்குமார் உள்ளிட்டோர் விஜய்யுடன் சென்று உலக நாயகனை சந்தித்து, தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.