நடிகர் விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பண்ணையாரும் பத்மினியும் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த விஜய் சேதுபதி கோலிவுட்டில் முன்னணி நடிகராக உருவெடுத்தார். இப்படி ஹீரோவாக கலக்கி வந்த விஜய் சேதுபதி பேட்ட படம் மூலம் வில்லனாக களமிறங்கினார். பின்னர் மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களில் வில்லனாக மிரட்டினார்.
24
Makkal Selvan Vijay Sethupathi
விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் படங்கள் சக்கைப்போடு போட்டதால் அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு மவுசு குறையத் தொடங்கியது. இதனால் உஷாரான விஜய் சேதுபதி, இனி வில்லன் வேடங்களில் நடிக்கப்போவதில்லை என முடிவெடுத்துள்ளார். அதன்பின்னர் முழுமையாக ஹீரோவாக நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். அவரின் 50-வது திரைப்படமான மகாராஜா இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
இப்படத்தின் புரமோஷனுக்காக பல்வேறு பேட்டிகள் அளித்த விஜய் சேதுபதி, சமீபத்திய பேட்டி ஒன்று தான் தயாரித்த படங்களால் ஏற்பட்ட நஷ்டம் குறித்து பேசி இருக்கிறார். அதன்படி, மேற்கு தொடர்ச்சி மலை, ஆரஞ்சு மிட்டாய், லாபம், முகிழ் போன்ற படங்களை தயாரித்த விஜய் சேதுபதி, ஒரு தயாரிப்பாளராக தனக்கு மோசமான அனுபவங்களே கிடைத்ததாக கூறி இருக்கிறார். ஒவ்வொரு முறையும் படம் தயாரிக்கும் போதும் நான் கடனாளியாக தான் ஆகி இருக்கிறேன்.
44
Mugizh Movie Vijay Sethupathi
அந்த கடனை அடைத்த பின்னர் வேறு ஒரு படத்தை தயாரிக்கின்றேன். லாபம் படத்தினால் ஏற்பட்ட கடனை இப்போது வரை அடைத்துக் கொண்டிருக்கிறேன். படங்கள் தயாரித்ததில் நல்ல அனுபவங்களும் கிடைத்தது. அதை வைத்து இனி வரும் காலங்களில் நல்ல படம் தயாரிப்பேன். என் மகளுடன் நான் நடித்த முகிழ் என்கிற படத்தை நான் தான் தயாரித்திருந்தேன். அந்த ஒரு படம் மட்டும் தான் எனக்கு லாபத்தை கொடுத்தது. அதைத்தவிர நான் தயாரித்த மற்ற எல்லா படமும் எனக்கு நஷ்டத்தை தான் தந்தன” என ஓப்பனாகவே கூறி இருக்கிறார் விஜய் சேதுபதி.