- Home
- Gallery
- Varalaxmi Sarathkumar : நயன்தாராவை தொடர்ந்து சமந்தாவை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்த வரலட்சுமி
Varalaxmi Sarathkumar : நயன்தாராவை தொடர்ந்து சமந்தாவை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்த வரலட்சுமி
நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்காக பிரபலங்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.

varalaxmi Sarathkumar
தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பிசியான ஹீரோயினாக வலம் வருபவர் வரலட்சுமி. நடிகர் சரத்குமாரின் மகளான இவருக்கு வருகிற ஜூலை 2ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. மும்பையை சேர்ந்த நிகோலாய் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த வரலட்சுமி அவரை தான் கரம்பிடிக்க உள்ளார். இவர்களது திருமணம் தாய்லாந்திலும், இதர நிகழ்வுகள் சென்னையிலும் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
varalaxmi meet samantha
வரலட்சுமியின் திருமணத்திற்கான பணிகள் தற்போதே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருமண அழைப்பிதழ் கொடுக்கும் வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், நயன்தாரா, சித்தார்த் என ஏராளமான பிரபலங்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார் வரலட்சுமி.
இதையும் படியுங்கள்... Ethirneechal : சீரியல் முடிந்தாலும்.. நட்புக்கு முடிவில்லை! எதிர்நீச்சல் சீரியல் டீமின் ரியூனியன் போட்டோஸ் இதோ
varalaxmi Invite samantha
தமிழ்நாட்டில் உள்ள திரைப்பிரபலங்களுக்கு அழைப்பிதழ் கொடுத்த கையோடு கன்னட திரையுலகம் பக்கம் சென்ற வரலட்சுமி, அங்கு கிச்சா சுதீப் உள்ளிட்ட பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கினார். இதையடுத்து தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற நடிகை வரலட்சுமி, அங்கு நடிகை சமந்தாவை நேரில் சந்தித்து அவருக்கு திருமண அழைப்பிதழை வழங்கி இருக்கிறார்.
varalaxmi Invite Anupam Kher
அப்போது சமந்தா, நடிகை வரலட்சுமியை கட்டியணைத்து தன் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து பாலிவுட் பிரபலம் அனுபம் கேரை நேரில் சந்தித்து தன்னுடைய திருமண அழைப்பிதழை கொடுத்த வரலட்சுமி அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... மங்காத்தா மாதிரி மாஸ் காட்டினாரா? இல்ல சுறா போல் புஸ்சுனு ஆனதா? விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா விமர்சனம்