படிப்பினால் மனஅழுத்தம்... பிள்ளைங்கள free-யா விட்ருங்க - தற்கொலை குறித்த விஜய் ஆண்டனியின் பேச்சு..!

Published : Sep 19, 2023, 09:05 AM ISTUpdated : Sep 19, 2023, 09:13 AM IST

Vijay Antony Daughter : மகள் மீரா தற்கொலை செய்துகொண்ட நிலையில், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கடைசியாக தற்கொலை குறித்து பேசியது வைரலாகி வருகிறது.

PREV
14
படிப்பினால் மனஅழுத்தம்... பிள்ளைங்கள free-யா விட்ருங்க - தற்கொலை குறித்த விஜய் ஆண்டனியின் பேச்சு..!
vijay antony daughter Meera

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகராக அவதாரம் எடுத்து அண்மையில் பிச்சைக்காரன் 2 படம் மூலம் இயக்குனராக களமிறங்கி வெற்றிகண்டவர் விஜய் ஆண்டனி. விஜய் ஆண்டனிக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் ஆனது. பாத்திமா என்பவரை திருமணம் செய்துகொண்ட விஜய் ஆண்டனிக்கு இரு மகள்கள் உள்ளனர். இதில் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

24
vijay antony

இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் உள்ள மின் விசிறியில் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதனால் இந்த விபரீத முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மகள் மீராவை இழந்து தவிக்கும் விஜய் ஆண்டனிக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக ஆறுதல் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Vijay Antony daughter:பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை; இதுதான் காரணமா?

34
vijay antony about suicide

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய் ஆண்டனி அளித்த பேட்டி ஒன்றில், தற்கொலை எண்ணம் எதனால் வருகிறது என்பது பற்றி பேசி இருக்கிறார். அதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியதாவது : “தற்கொலை எண்ணம் நிறைய பேருக்கு வருதுனு கேள்விப்பட்டேன். நிறைய பேருக்கு அது பண பிரச்சனையால வருது. அளவுக்கு அதிகமா கமிட்மெண்ட் அப்புறம் ரொம்ப நம்பிக்கையை யார் மேலயாவது வச்சிட்டு, அவங்க ஏமாத்தும் போது வருது.

44
vijay antony daughter suicide

அதிகமா அது ஸ்கூல்ல தான் நடக்குது. படிப்பினால் வரக்கூடிய அழுத்தத்தால் நடக்குது. நம்மளும் என்ன பண்றோம், பிள்ளைங்க ஸ்கூல்ல இருந்து வந்த உடனே, டியூசன் போனு சொல்றோம். அவங்க ஸ்கூல்லயே படிச்சிட்டு தான் வர்றாங்க, எப்போதும் அவர்களை ஏளனமா பார்க்குறோம் சிந்திக்க டைம் இல்லாம ஆக்கிடுறோம். இப்படி வரக்கூடாது. அதற்கு சுற்றி உள்ளவர்கள் காரணமாக இருக்கலாம். முக்கியமாக பெற்றோர்கள். பஃபிரீயா விட்றுங்க பசங்கள. நீங்க உங்கள லவ் பண்ணாலே இதெல்லாம் வராது” என பேசி இருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், இப்படி ஒரு மனுஷனுக்கா இது நடக்கனும் என கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... "திட்டம்போட்டு தப்பிக்கணும் கண்ணா".. க்ரைம் சீனில் கெத்தாக அமர்ந்திருக்கும் தளபதி - வெளியான லியோ அப்டேட்!

Read more Photos on
click me!

Recommended Stories