Election: விஜய், அஜித் முதல் ரஜினி வரை.. ஒயிட் கலர் டிரஸில் வந்து ஓட்டு போட்ட பிரபலங்கள்- அதுவும் இத்தனை பேரா?

Published : Apr 19, 2024, 01:45 PM IST

மக்களவை தேர்தலில் வாக்களிக்க வந்த பெரும்பாலான சினிமா பிரபலங்கள் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து வந்திருந்தது குறித்த புகைப்பட தொகுப்பை பார்க்கலாம்.

PREV
19
Election: விஜய், அஜித் முதல் ரஜினி வரை.. ஒயிட் கலர் டிரஸில் வந்து ஓட்டு போட்ட பிரபலங்கள்- அதுவும் இத்தனை பேரா?

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் இன்று நடைபெற்று வருகிறது. காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் திரைப்பிரபலங்களும் ஆர்வமுடன் வந்து வாக்களித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான அஜித், ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ் ஆகியோர் காலையிலேயே வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். நடிகர் விஜய்யும் பிற்பகல் 12 மணியளவில் வந்து தனது வாக்கினை செலுத்தினார். இப்படி வாக்களிக்க வந்த பிரபலங்களில் பெரும்பாலானோர் வெள்ளைநிற ஆடையில் வந்து வாக்களித்தனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

29

நடிகர் சீயான் விக்ரம் வெள்ளை நிற டீ-சர்ட் அணிந்தபடி ஸ்டைலிஷாக வந்து தனது வாக்கினை செலுத்திவிட்டு சென்றார்.

39

நடிகர் சூர்யாவும் ஒயிட் கலர் டீசர் அணிந்து வந்து வாக்களித்தார். அவருடன் அவரது தந்தை சிவக்குமார் மற்றும் தம்பி கார்த்தி ஆகியோர் வந்திருந்தனர்.

49

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வெள்ளை நிற டீசர்ட் அணிந்து செம்ம யங் லுக்கில் வந்து தனது வாக்கினை செலுத்தினார்.

இதையும் படியுங்கள்... Thalapathy Vijay Injured: கோட் ஷூட்டிங்கின்போது விபத்தில் சிக்கிய விஜய்? கையில் காயத்தோடு வந்து வாக்களித்தார்

59

நடிகர் அஜித், காலையில் முதல் ஆளாக வந்து வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார். அவரும் வெள்ளை நிற சட்டை அணிந்து வந்திருந்தார்.

69

நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் சரத்குமார் மற்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆகியோரும் ஒயிட் கலர் ஆடை அணிந்து வந்து தான் வாக்குப்பதிவு செய்தனர்.

79

நடிகர் தனுஷ் ஸ்டைலிஷாக தன்னுடைய பென்ஸ் காரில் வாக்குப்பதிவு செய்ய வந்திருந்தார். அவரும் வெள்ளை நிற ஆடை அணிந்து தான் வந்திருந்தார்.

89

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் இன்று காலையிலேயே முதல் ஆளாக வந்து ஜனநாயக கடமையை ஆற்றினார். அவரும் வெள்ளை நிற டீ சர்ட் அணிந்து வந்து வாக்கு செலுத்தினார்.

99

நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான தளபதி விஜய் ஒயிட் கலர் சட்டை அணிந்து வந்து தனது வாக்கினை செலுத்தினார்.

இதையும் படியுங்கள்... Thalapathy Vijay: 2024 மக்களவை தேர்தலில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார் தளபதி விஜய்! வீடியோ

Read more Photos on
click me!

Recommended Stories