துண்டுச்சீட்டு முதல்வர்! வித்தவுட் டிக்கெட்டில் வந்த குடும்பம்! ஊழல் காரணமாக ஆட்சியை இழந்த கட்சி! TTV விளாசல்!

First Published Apr 12, 2024, 8:34 AM IST

என் மீதுள்ள வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன். பாஜக கூட்டணிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என முதல்வர் ஸ்டாலினுக்கு டிடிவி.தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். 

TTV Dhinakaran

தேனி மக்களவைத் தொகுதி பாஜக கூட்டணியின் அமமுக வேட்பாளர் டிடிவி.தினகரன் போடிநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது 
கடந்த ஒரு வாரமாக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக பிற மாவட்டங்களுக்குச் சென்றிருந்தேன். இந்த நேரத்தில் அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமியும், ஸ்டாலினும் வந்து என்னைப் பற்றி பேசியிருக்கிறார்கள். துண்டுச்சீட்டு முதல்வருக்கு யார் எழுதிக் கொடுப்பது எனத் தெரியவில்லை. என்னை பற்றி பேசியிருக்கிறார். என் மீதுள்ள வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன். பாஜக கூட்டணிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்றார். 

MK Stalin

தேனி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன அச்சறுத்தல் இருக்கிறது. காலை முதல் உச்சி வெயிலில் போலீசார், பெண் போலீசார் நிற்க வைக்கப்பட்டிருக்கின்றனர். கருணாநிதி எந்த நேரத்தில் ஸ்டாலின் என பெயர் வைத்தாரோ தெரியவில்லை. இந்த ஸ்டாலின் கொடுங்கோலராக இருக்கிறார். ஊழல் காரணமாக ஆட்சியை இழந்த கட்சி திமுக. 

Karunanidhi

வித்தவுட் டிக்கெட்டில் வந்த குடும்பம் செய்த ஊழலால் ஆட்சியே கலைக்கப்பட்டது. சர்காரியா கமிஷன் திமுக விஞ்ஞானபூர்வ ஊழல் செய்திருப்பதாகக் கூறியது. இந்திரா காந்தி கச்சத்தீவை தாரைவார்த்தபோது, சர்காரியா கமிஷனால் உள்ளே சென்றுவிடுவோம் என கருணாநிதி கச்சதீவை விட்டுக்கொடுத்தார். போதைப்பொருள் விற்கும் கட்சியாக திமுக இருந்து வருகிறது.

Edappadi Palanisamy

திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி கள்ளக்கூட்டணி வைத்திருப்பது தெரிந்துவிட்டது. பச்சோந்தி யார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். தேனி தொகுதியில் இங்கு ஜெயித்துவிடக் கூடாது என்பதற்காகவே அதிமுக, திமுகவுக்கு உதவுகிறது. அதற்கு ஆதரவாக கொடநாடு கொலை வழக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. நான் பிரதமர் வேட்பாளர் மோடியை முன்னிருத்தி வாக்கு சேகரிக்கிறேன். திமுக-வில் பிரதமர் வேட்பாளர் யார் என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

click me!