பா.இரஞ்சித் படத்துக்கு இளையராஜா இசையா? திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?

Published : Dec 21, 2023, 03:37 PM IST

இசைஞானி இளையராஜாவின் இசைக்கூடத்துக்கு சென்ற இயக்குனர் பா.இரஞ்சித் அவரை நேரில் சந்தித்து அவருடன் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

PREV
14
பா.இரஞ்சித் படத்துக்கு இளையராஜா இசையா? திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்திருப்பவர் பா.இரஞ்சித். இவர் இயக்கத்தில் தற்போது தங்கலான் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சீயான் விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப்-ஐ மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. இதில் விக்ரமுடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

24

தங்கலான் திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் படத்தின் பணிகள் தாமதம் ஆவதால் இப்படத்தை மார்ச் மாதத்திற்கு தள்ளிவைத்து உள்ளதாக கூறப்படுகிறது. தங்கலானை தொடர்ந்து சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார் பா.இரஞ்சித். இதையடுத்து நடிகர் கார்த்தி உடன் ஒரு படம், கமல்ஹாசன் உடன் ஒரு படம் என செம்ம பிசியான லைன் அப் உடன் காத்திருக்கிறார்.

34

இந்த நிலையில், அவர் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளங்களில் பகிர்ந்து எண்ணமெல்லாம் வண்ணமம்மா என பதிவிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் பா.இரஞ்சித்.

44

இதைப்பார்த்த நெட்டிசன்கள் அடுத்த படத்தில் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளார்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர். பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மார்கழியில் மக்களிசை என்கிற விழா விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது. அதற்கான் அழைப்பிதழை கொடுக்கவே அவர் இளையராஜாவை சந்தித்திருப்பார் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இதில் எது உண்மை என்பது பா.இரஞ்சித் சொன்னால் தான் தெரியவரும்.

இதையும் படியுங்கள்... விஜய் சேதுபதி இடத்தை Replace செய்த மிர்ச்சி சிவா... சூப்பர் அப்டேட் உடன் வெளிவந்த ‘சூது கவ்வும் 2’ ஸ்டில்ஸ்

Read more Photos on
click me!

Recommended Stories