Toll Gate Charges: தமிழ்நாட்டில் அதிரடியாக உயரும் சுங்கச்சாவடி கட்டணம்.. அதுவும் எவ்வளவு தெரியுமா?

Published : Mar 23, 2024, 12:25 PM ISTUpdated : Mar 23, 2024, 12:32 PM IST

தமிழ்நாட்டில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வருவதாக  இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. 

PREV
14
Toll Gate Charges: தமிழ்நாட்டில் அதிரடியாக உயரும் சுங்கச்சாவடி கட்டணம்.. அதுவும் எவ்வளவு தெரியுமா?
Tamilnadu

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதில், முதன்மையாக உள்ள சுங்கச்சாவடிகளுக்கு ஏப்ரல் மாதமும், அதன்பிறகு மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படும்.

24
Toll Gate

தமிழ்நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 55 சுங்கச்சாவடிகள் உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 சுங்கச்சாவடிகளிலும், செப்டம்பர் மாதம் மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

34
tamilnadu

அதன்படி, தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் ஏப்ரல் 1ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் உயர்த்தப்படுகிறது. மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் 100 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணம் மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ. 5 முதல் 20 வரை உயர்ந்துள்ளது. 

44
TamilNadu toll gate charges

திருவண்ணாமலை மாவட்ட இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி, அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

click me!

Recommended Stories