சூப்பர் ஸ்டாரின் தலைவர் 171.. நிறைய VFX காட்சிகள் இருக்கும்.. லோக்கி சொன்ன சீக்ரெட் - வெளியிட்ட DOP மனோஜ்!

Ansgar R |  
Published : Oct 23, 2023, 09:25 PM IST

ஜெயிலர் திரைப்பட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது அடுத்த திரைப்பட பணிகளை தற்பொழுது துவங்கியுள்ளார். இந்நிலையில் அவருடைய 171வது திரைப்படம் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.  

PREV
13
சூப்பர் ஸ்டாரின் தலைவர் 171.. நிறைய VFX காட்சிகள் இருக்கும்.. லோக்கி சொன்ன சீக்ரெட் - வெளியிட்ட DOP மனோஜ்!
Jailer

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இறுதியாக நெல்சன் திலீப் குமார் அவர்களுடைய இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 600 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. பல திரைப்படங்களில் சாதனையை இந்த திரைப்படம் முறியடித்ததும் குறிப்பிடத்தக்கது.

Japan Song: 'ஜப்பான்' படத்தில் கார்த்தி பாடியுள்ள... டச்சிங் டச்சிங் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியானது! வீடியோ

23
Gnanavel

இந்நிலையில் தனது மகளின் லால் சலாம் திரைப்படப் பணிகளை முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அதனைத் தொடர்ந்து தனது 170 ஆவது திரைப்பட பணிகளை தற்பொழுது துவங்கியுள்ளார். பிரபல இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் கேரளா மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ச்சியாக இந்த திரைப்படத்தின் படபிடிப்பு பணிகள் நடந்து வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

33
Lokesh Kanagaraj new movie

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய 171 வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள நிலையில் அந்த திரைப்படம் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா வெளியிட்ட தகவல்களின்படி.. இந்த திரைப்படம் ஐமேக்ஸ் கேமராவைக் கொண்டுதான் படமாக்கப்பட உள்ளது.

மேலும் அந்த திரைப்படத்தில் நிறைய VFX காட்சிகள் அடங்கியிருக்கும் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே இந்த திரைப்படம் குறித்து ஒரு வரியில் லோகேஷ் கனகராஜ் தன்னிடம் கூறியுள்ளதாகவும். இது ரொம்பவும் எக்ஸ்பிரிமெண்டல் படமாகவும், ஒளிப்பதிவு ரீதியாக சேலஞ்ச் அளிக்கும் ஒரு திரைப்படமாகவும் அமைய உள்ளது என்று அவர் கூறியுள்ளார். ஆகவே ரஜினியின் ரசிகர்கள் இந்த திரைப்படம் ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படமாக இருக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறி வருகின்றனர். 

அண்ணன் வரார் வழிவிடு.. ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் லியோ.. வசூலில் DiCaprioவை ஓரம்கட்டிய தளபதி விஜய்!

Read more Photos on
click me!

Recommended Stories