அவர் தான் தமிழகத்தின் ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர். 1965 ஆம் ஆண்டு தமிழில் வெளியான இரவும் பகலும் என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசனின் ஆளுமை தமிழ் சினிமாவில் இருந்த காலகட்டத்திலேயே தனக்கென்று ஒரு தனி ஸ்டைலில் அமைத்து, தான் திரைத்துறையில் அறிமுகமான 10 ஆண்டுகளுக்குள் 100 திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்த ஒரு மாபெரும் நடிகர்.
சுமார் 320க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார், அது மட்டுமல்லாமல் ஒரே வருடத்தில் 35 படங்கள் வரை நடித்த பிஸியான நடிகராக இருந்த போதும் கூட, தனது ரசிகர்களையும் பொதுமக்களையும் கண்டு அரவணைத்து பேசுவதில் இவருக்கு இவரே என்று கூறுகின்றனர். ஆதரவற்றவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுத்த மாபெரும் கொடை வள்ளல் என்றும் அக்கால நடிகர்கள் இவரை புகழ்வது உண்மையே.