எதிர்நீச்சல் தொடரில் சிங்கப்பெண்களாய் ஜொலிக்கும் 4 ஹீரோயின்களுக்கு வாரி வழங்கப்படும் சம்பளம்- அதுவும் இவ்வளவா?

First Published | Jan 25, 2024, 8:41 AM IST

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நாயகிகளாக நடிக்கும் மதுமிதா, கனிகா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி ஆகியோரின் சம்பள விவரம் பற்றி பார்க்கலாம்.

Ethirneechal

சன் டிவி சீரியல்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் மவுசு அதிகம். அந்த வகையில் குறுகிய காலத்தில் ஏகோபித்த வரவேற்பை பெற்று டிஆர்பியில் சக்கைப்போடு போட்ட சீரியல் தான் எதிர்நீச்சல். கடந்த 2022-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார். இதன் விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் கச்சிதமான கதாபாத்திர தேர்வும் தான் இந்த சீரியலின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

Ethirneechal Serial

அதில் இந்த சீரியலில் இடம்பெற்ற ஆதி குணசேகரன் கேரக்டருக்கு தனி ரசிகர்பட்டாளமே உருவானது. அதற்கு காரணம் மாரிமுத்து தான். அவர் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார் என்று சொல்வதை விட கதாபாத்திரமாகவே வாழ்ந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி உலகளவில் பேமஸ் ஆனார். இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எதிர்நீச்சல் சீரியல் டப்பிங் பணியில் ஈடுபட்டிருந்த போது மாரிமுத்துவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

இதையும் படியுங்கள்... Anna Serial: நான் இருக்கேன்... ரத்னாவுக்கு ஷண்முகம் கொடுத்த வாக்கு! திருமணம் நடக்குமா? அண்ணா சீரியல் அப்டேட்!

Tap to resize

Ethirneechal Serial Heroines

மாரிமுத்துவின் மறைவுக்கு பின்னர் அவரது ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிக்க வேல ராமமூர்த்தி கமிட் ஆனார். இருப்பினும் மாரிமுத்து அளவுக்கு அவரது நடிப்பு இல்லை என்பதே ரசிகர்களின் கருத்தாக உள்ளது. மாரிமுத்து மறைவுக்கு பின் டிஆர்பியில் சரிவை சந்தித்த எதிர்நீச்சல் சீரியல், தற்போது விறுவிறுப்பான திரைக்கதை காரணமாக மீண்டும் பிக் அப் ஆக தொடங்கி உள்ளது. இந்த தொடரில் ஆதி குணசேகரனுக்கு அடுத்தபடியாக ரசிகர்களால் கொண்டாடப்படுவது நான்கு நாயகிகளின் கேரக்டர்கள் தான்.

Ethirneechal Serial Heroines Salary

அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் ஹீரோயின்களாக நடிக்கும் மதுமிதா, கனிகா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி ஆகிய நான்கு பேரின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இதில் முக்கிய கதாநாயகியான மதுமிதாவுக்கு ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறதாம். இதையடுத்து கனிகா மற்றும் ஹரிப்பிரியா ஆகியோர் தலா ரூ.12 ஆயிரமும், பிரியதர்ஷினிக்கு ரூ.10 ஆயிரமும் சம்பளமாக வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... கார்த்திக் செயலால்.. சிக்க போகும் தீபா? வேண்டுதல் பலிக்குமா.. பரபரப்பான காட்சிகளுடன் கார்த்திகை தீபம் அப்டேட்!

Latest Videos

click me!