நாளை மாலை வெளியாகும் SK21ன் மாஸ் அப்டேட்.. டைட்டில் என்னவா இருக்கும்? - கொளுத்தி போடும் நெட்டிசன்கள்!

Ansgar R |  
Published : Feb 15, 2024, 07:14 PM IST

Sivakarthikeyan 21 Movie : நாளை பிப்ரவரி 16ம் தேதி மாலை சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அவருடைய 21வது படத்தின் டைட்டில் டீசர் வெளியாகவுள்ளது.

PREV
13
நாளை மாலை வெளியாகும் SK21ன் மாஸ் அப்டேட்.. டைட்டில் என்னவா இருக்கும்? - கொளுத்தி போடும் நெட்டிசன்கள்!
Sivakarthikeyan

தமிழ் திரை உலகில் தொடர்ச்சியாக தரமான நல்ல திரைப்படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன், முதல் முறையாக பிரபல நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

ஜெயிலர் பட நாயகி மிர்னா நடிப்பில்... இன்டென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள 'பர்த் மார்க்'! ட்ரைலர் வெளியானது!

23
rajkumar periyasamy

பிரபல ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தில் தோன்றுவார் என்ற எதிர்பார்ப்பு அவருடைய ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

33
Por Kanda Singam

அண்மையில் இந்த திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் மேற்கொண்ட உடற்பயிற்சி குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது. இந்நிலையில் நாளை பிப்ரவரி 16ஆம் தேதி இந்த திரைப்படத்தில் டைட்டில் டீசர் வெளியாகவுள்ள நிலையில், இந்த திரைப்படத்தின் டைட்டில் "போர் கண்ட சிங்கம்" என்று இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக நெட்டிசன்கள் தற்பொழுது தங்கள் யுகங்களை வெளியிட்டு வருகின்றனர்.

திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தேர்தல் தடை நீக்கம்! தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியானது!

Read more Photos on
click me!

Recommended Stories