தமிழ் சினிமாவில், பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் பார்த்து பொறாமை கொள்ளும் நட்சத்திர ஜோடியாக இருப்பவர்கள் அஜித் - ஷாலினி தம்பதி. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பிரபலமான ஷாலினி, அஜித்துடன் இணைந்து 'அமர்க்களம்' படத்தில் நடித்த போது... அஜித் ஷாலினியை காதலிக்க துவங்கினார். ஆரம்பத்தில் ஷாலினி இவரின் காதலை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டினாலும் பின்னர் காதலை ஏற்றுக்கொண்டார்.