Published : Jun 17, 2024, 04:20 PM ISTUpdated : Jun 17, 2024, 07:03 PM IST
அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா மற்றும் தம்பி ராமய்யா மகன் உமாபதி திருமண வரவேற்பில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்திய நிலையில் இது குறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
கோலிவுட் திரையுலகில் அனைவருக்கும் பரிச்சியமான முகங்கள் தான் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் காமெடி நடிகர் தம்பி ராமய்யா ஆகியோர். இவர்கள் இருவருக்குமே தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு.
29
Aishwarya Arjun - Umapathy Reception Photos
கன்னட நடிகரான அர்ஜுன், 80-களில் ஹீரோவாக தமிழில் அறிமுகமாகி... தற்போது முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து வருகிறார். அதே போல் தேசிய விருது நடிகரும் - இயக்குனருமான தம்பி ராமையா, தொடர்ந்து அழுத்தமான ரோல்களில் நடித்து வருகிறார்.
தங்களின் பிள்ளைகள் காதலுக்கு பச்சை கொடி காட்டி, சம்பந்திகளாக மாறியுள்ள இவர்கள் இருவரின் பிள்ளைகளான, ஐஸ்வர்யா மற்றும் உமாபதி இருவருமே நடிகர்கள் தான்.
49
Aishwarya Arjun - Umapathy Reception Photos
பட்டத்து யானை திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஐஸ்வர்யாவுக்கு அந்த படம் வெற்றியை கொடுக்காத நிலையில், பின்னர் ஒரு படத்தில் கூட அவர் நடிக்கவில்லை. இவரின் தந்தை அர்ஜுன், மகள் ஐஸ்வர்யாவை வைத்து இயக்கி - தயாரித்த படமும் படு தோல்வியை சந்தித்தது.
அதே போல் உமாபதியும், தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க தொடர்ந்து போராடி வரும் இளம் நடிகராக உள்ளார். ஆனால் இவர் நடித்த ஒரு படம் கூட இதுவரை உமாபதிக்கு கைகொடுக்கவில்லை.
69
Aishwarya Arjun - Umapathy Reception Photos
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட (ஜூன் 14-ஆம் தேதி) பித்தலாமாத்தி என்கிற திரைப்படம் வெளியாகி... இரண்டே நாட்களில் பல திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டு விட்டது. திருமணத்தில் கவனம் செலுத்திய உமாபதி, புரமோஷன் பணியில் கலந்து கொள்ளாததே இப்படத்தின் தோல்விக்கு காரணம் என தயாரிப்பாளர் உமாபதியை சாடினார்.
உமாபதி - ஐஸ்வர்யா திருமணம் மிகவும் எளிமையாக, அர்ஜுன் கொளப்பாக்கத்தில் கட்டியுள்ள ஆஞ்சிநேயர் கோவிலில் நடந்து முடிந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
89
Aishwarya Arjun - Umapathy Reception Photos
இதை தொடர்ந்து ஜூன் 15-ஆம் தேதி, உமாபதி - ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு மிக பிரமாண்டமாக நடந்தது. இதில் ஒட்டு மொத்த திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
குறிப்பாக, அஜித் மனைவி ஷாலினி தன்னுடைய மகள் அனோஷ்காவுடன் கலந்து கொண்டார், அதே போல் சிவகார்த்திகேயன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சினேகா - பிரசன்னா ஜோடி, பிரபு தேவா போன்ற பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.