8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில் சாலையில் வலம் வரும் பிரபலம்! யாருனு தெரிஞ்சா அசந்துடுவீங்க!

First Published | Oct 19, 2023, 3:22 PM IST

பிரபல முன்னணி நடிகர் ஒருவர் அடிக்கடி மும்பை பகுதியில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில் வலம் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இவர், கலந்து கொண்ட ரீ யூனியன் நிகழ்ச்சிக்கும் இந்த காரில் தான் வந்திருந்தார்.
 

அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல, பாலிவுட் திரையுலகின் கிங் காங் ஷாருக்கான் தான். இவருக்கு வெள்ளை நிறம் பிடிக்கும் என்பதால், தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரையும் வெள்ளை நிறத்தில் தான் வாங்கியுள்ளார். அஜய் தேவ்கன், அமிதாப் பச்சன், அம்பானி போன்ற சிலர் மட்டுமே இந்த காரை வைத்திருந்தாலும், இந்த காரில் அவர்களை பார்ப்பது மிகவும் அரிது.
 

ஆனால், ஷாருகான் விமான நிலையம் செல்வது, வெளியில் செல்வது என அனைத்துக்குமே அந்த காரை தான் பயன்படுத்துகிறார். அந்த வகையில் கடந்த 1998 ஆம் ஆண்டு, ஷாருக்கான் மற்றும் ராணி முகர்ஜி நடிப்பில், கரண் ஜோகர் இயக்கத்தில் வெளியான 'குச் குச் ஹோத்த ஹே' படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து, அக்டோபர் 16 ஆம் தேதி, இந்த படத்தில் பணியாற்றிய பிரபலங்கள் ரீ யூனியன் பார்ட்டி ஒன்றை கொண்டாடினர்.

பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்..! பாம்பு - கீரி போல் சீறிக்கொண்டு சண்டை போட்ட விஜய் மற்றும் விஷ்ணு! வெளியான புரோமோ!
 

Tap to resize

இந்த நிகழ்ச்சிக்கு கூட ஷாருக்கான் தன்னுடைய ஃபேவரட் காரான, ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில் தான் செம்ம ஸ்டைலிஷாக வந்து இறங்கினார். ராணி முகர்ஜி தனது நீல நிற மெர்சிடிஸ்-மேபக் எஸ்-க்ளாஸ் காரிலும் , கரண் ஜோகர் தனது வெள்ளை நிற ஆடி ஏ8 காரிலும் சென்றார். இதுகுறித்த புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

குறிப்பாக ஷாருக்கானின் காரை தான், பலர் உற்று நோக்கி வருகிறார்கள். இந்த் காரின் ஆரம்ப விலை என பார்த்தல் 6.95 கோடியில் இருந்து ஆரம்பமாகிறது. ஆனால் இதன் ஆன் ரோடு விலை 8 கோடி ரூபாய். கல்லினன் தான் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் ஆல் வீல் டிரைவ் எஸ்யூவி ரக கார் ஆகும். கடந்த 2018ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வந்த ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில், 6.75 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

'லியோ' படம் பார்க்க வந்த ரசிகருக்கு... தியேட்டரில் கால் உடைந்ததால் பரபரப்பு!

அதிகபட்சமாக 600 பிஎஸ் பவர் மற்றும் 900 என்எம் டார்க் திறனை கொண்டுள்ளது. இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு அதிநவீன மற்றும் சொகுசு வசதிகளும், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos

click me!