பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்..! பாம்பு - கீரி போல் சீறிக்கொண்டு சண்டை போட்ட விஜய் மற்றும் விஷ்ணு! வெளியான புரோமோ!
பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது... விஜய் மாற்று விஷ்ணு இருவரும், மோதிக்கொள்ளும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தை எட்ட உள்ள, பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த முறை பிக்பாஸ் வீடு - ஸ்மால் பாஸ் வீடு என இரண்டு வீடுகள் உள்ளது. கேப்டனால் தேர்வு செய்யப்படும் 6 போட்டியாளர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள் தான், பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்கும் சமையல் செய்வது முதல், வெசல் வாஷ் என அணைத்து வேலைகளையும் செய்ய வேண்டும்.
இதை தவிர பாத்ரூம் மற்றும் ஹவுஸ் கிளீனிங் வேலைகளை பிக்பாஸ் வீட்டை சேர்ந்தவர்கள் செய்ய வேண்டுமா? அல்லது ஸ்மால் ஹவுஸ் வீட்டை சேர்ந்தவர்கள் செய்ய வேண்டுமா? என்பதை தீர்மானிக்க இரு வீட்டை சேர்ந்தவர்களுக்கும் போட்டிகள் வைத்து, தேர்வு செய்யப்படும். இதை தவிர ஸ்மால் பாஸ் வீட்டை சேர்ந்தவர்கள் எந்த டாஸ்க்கிலும் கலந்து கொள்ள கூடாது என்பது விதிமுறை.
'லியோ' படம் பார்க்க வந்த ரசிகருக்கு... தியேட்டரில் கால் உடைந்ததால் பரபரப்பு!
ஆனால், தற்போது டாஸ்குகள் கடினமாகிக்கொண்டே செல்வதால்... இரு வீட்டை சேர்ந்தவர்களையும் முட்டி மோத வைத்து அழகு பார்த்து வருகிறார் பிக்பாஸ். அந்த வகையில், ஆக்சிஜன் எமர்ஜென்சி என பேரிடப்பட்டுள்ள புதிய டாஸ்க் இரு வீட்டை சேர்ந்தவர்களுக்கும் நடைபெறுகிறது. காடன்கிரியாவில் 30 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், எந்த வீட்டை சேர்ந்தவர்கள் அதிகமான பாட்டில்களை கைப்பற்றி வைத்துள்ளார்களோ அவர்களே வெற்றியாளர்கள் என அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதை தொடர்ந்து பிக் பாஸ் மற்றும் ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு இடையே அந்த பாட்டில்களை எடுப்பதில் கடுமையான போட்டி ஏற்படுகிறது. ஒருவருக்கொருவர் அடித்துப் பிடித்துக் கொண்டு சிலிண்டர்களை கைப்பற்ற முயல்வதில், பிக் பாஸ் வீட்டில் உள்ள கண்ணாடி நொறுங்கி கொட்டுவதையும் பார்க்க முடிந்தது. இதனால் தற்காலிகமாக பிக் பாஸ் இந்த விளையாட்டு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதைத்தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோவில் விஜய்க்கும் - விஷ்ணுவுக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்படுகிறது. விஜயை விஷ்ணு தடுக்க முயன்ற போது, இருவரும் ஒருவருக்கொருவர் பாம்பு - கீரி போல் மோதி கொள்கிறார்கள். பின்னர் விஷ்ணு ஸ்மால் ஹவுஸில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, அவன் அடிச்சு மூஞ்ச ஒடச்சி வீட்டுக்கு அனுப்பி விடுவான் போல, நமக்கு மூஞ்சி தான் சோறு போடுது என பேசுகிறார். இருவருக்கும் இடையே நடந்த இந்த சண்டை தற்போது பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.