1000 கோடியை அள்ளிய ‘ஜவான்’! அட்லீ முதல் நயன்தாரா வரை பிரபலங்களுக்கு ஷாருக்கான் வாரி வழங்கிய சம்பள விவரம் இதோ

Published : Sep 25, 2023, 11:11 AM ISTUpdated : Sep 25, 2023, 11:35 AM IST

ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ஜவான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடி வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்துள்ளது.

PREV
17
1000 கோடியை அள்ளிய ‘ஜவான்’! அட்லீ முதல் நயன்தாரா வரை பிரபலங்களுக்கு ஷாருக்கான் வாரி வழங்கிய சம்பள விவரம் இதோ
Jawan salary details

கோலிவுட்டில் 4 பிளாக்பஸ்டர் ஹிட் கமர்ஷியல் படங்களை இயக்கி வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்த அட்லீ, பாலிவுட்டில் அறிமுகமான திரைப்படம் தான் ஜவான். இப்படத்தில் நடிகர் ஷாருக்கான் நாயகனாக நடித்ததோடு, தனது ரெட் சில்லீஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்தும் இருந்தார். கடந்த செப்டம்பர் 7-ந் தேதி திரைக்கு வந்த இப்படம் மாஸான வரவேற்பை பெற்று வருவதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.1000 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் பற்றி பார்க்கலாம்.

27
அட்லீ

அட்லீ பாலிவுட்டில் இயக்கும் முதல் படமாக ஜவான் இருந்தாலும் இப்படத்திற்காக அவருக்கு சம்பளத்தை வாரி வழங்கி இருக்கிறார் ஷாருக்கான். இப்படத்திற்காக அட்லீக்கு ரூ.30 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் தன் சம்பளத்தை ரூ.50 கோடியாக உயர்த்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

37
நயன்தாரா

தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார். கோலிவுட்டில் ஒரு படத்துக்கு ரூ.5 கோடி சம்பளமாக வாங்கி வந்த நயன்தாராவுக்கு ஜவான் படத்திற்காக ரூ.10 கோடி சம்பளமாக வழங்கி இருக்கிறார் ஷாருக்.

47
தீபிகா படுகோனே

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனேவும் ஜவான் படத்தில் ஒரு மாஸான ரோலில் நடித்திருந்தார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் அதகளம் செய்திருந்த தீபிகா படுகோனேவுக்கு சின்ன ரோலாக இருந்தாலும், அதில் நடிக்க அவருக்கு ரூ.20 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாம்.

இதையும் படியுங்கள்... பெரியார்... பிள்ளையாரோடு சேரும் சகதியுமாக நிற்கும் அருண்விஜய்! பாலாவின் வணங்கான் பர்ஸ்ட் லுக் இதோ

57
விஜய் சேதுபதி

ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் மாஸான வில்லனாக எண்ட்ரி கொடுத்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. இப்படத்தில் வில்லனாக நடிக்க அவருக்கு ரூ.21 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஜவான் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய் சேதுபதிக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

67
பிரியாமணி

தமிழில் பருத்திவீரன், மலைக்கோட்டை, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களில் நடித்து பிரபலமான பிரியாமணி, ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதோடு இப்படத்தில் ஷாருக்கான் உடன் சேர்ந்து குத்தாட்டமும் ஆடி இருந்த பிரியாமணிக்கு ரூ.2 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது.

77
யோகிபாபு

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் ஜவான் படத்தில் ஷாருக்கான் உடன் சேர்ந்து நடித்திருந்தார். இப்படத்தில் கம்மியான சம்பளம் வாங்கிய நடிகரும் அவர்தான். அவருக்கு ரூ.35 லட்சம் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளது. ஜவானுக்கு முன்னதாக சென்னை எக்ஸ்பிரஸ் படத்திலும் ஷாருக்கான் உடன் சேர்ந்து நடித்திருந்தார் யோகிபாபு.

இதையும் படியுங்கள்... முதல் மரியாதையில் நடிக்க மறுத்தது முதல் 15 வயது பெண்ணை திருமணம் செய்தது வரை.. எஸ்பிபி பற்றிய டாப் 10 சீக்ரட்ஸ்

Read more Photos on
click me!

Recommended Stories