Karthigai Deepam: தீபா அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்! கார்த்திக் முடிவால் பதற்றத்தில் ரம்யா! கார்த்திகை தீபம் அப்டேட்

Published : Jul 08, 2024, 01:05 PM ISTUpdated : Dec 09, 2024, 05:15 PM IST

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் ரம்யாவுக்கு போன் செய்து தீபா குறித்து விசாரிக்க அவள் காரில் இருந்து வெளியே இறங்கி வந்து பேசிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

PREV
15
Karthigai Deepam: தீபா அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்! கார்த்திக் முடிவால் பதற்றத்தில் ரம்யா! கார்த்திகை தீபம் அப்டேட்

அதாவது, ரம்யா கார்த்திக்கை சமாளித்து விட்டு மீண்டும் காருக்குள் சென்று ஏற தீபா என்னுடைய புருஷனா போன் பண்ணாரு என்று கேட்க ரம்யா இல்லை என்று சமாளிக்கிறாள். 

25

மறுபக்கம் கார்த்திக், இளையராஜா ஆகியோர் தீபாவை தேடி அலைய, இளையராஜா தீபா வாய்ஸ் மெஸேஜ் செய்திருப்பதை கவனித்து கார்த்திக்கிடம் சொல்கிறான். 

ஊரே மெச்சும் படி மகள் திருமணத்தை நடத்திய நடிகர் சிவக்குமார்! சூர்யா - கார்த்தி சகோதரி பிருந்தா வெட்டிங் போட்டோ

35

உடனே கார்த்திக் அந்த வாய்ஸ் மெசேஜை கேட்கும் போது அபிராமிக்கு குணமாகவதற்காக பரிகாரம் செய்ய போவதாகவும் தனது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் அதுக்கு நான் தான் பொறுப்பு என்று பேசி இருப்பதை கேட்டதும் ஷாக் ஆகிறான். 

45

இது தீபாவாக பேசுன மாதிரி தெரியல, யாரோ இப்படி பேச வச்சிருக்காங்க என்று சந்தேகப்படும் கார்த்திக் கூடிய சீக்கிரமா தீபாவை கண்டு பிடிக்க வேண்டும் என்று சொல்லி தனது போலிஸ் நண்பருக்கு போன் செய்து வாய்ஸ் மெசேஜ் எந்த டவரில் இருந்து வந்திருக்கு என்பதை கண்டுபிடிக்க சொல்கிறான். 

வரலட்சுமி கல்யாண செலவு மட்டும் இத்தனை கோடியா? விக்கிரவாண்டி இடைதேர்தல் பிரச்சாரத்தில் சரத்குமார் கூறிய தகவல்!
 

55

மறுபக்கம் தீபாவும் ரம்யாவும் பரிகாரம் செய்யும் இடத்திற்கு வந்திருக்க, போலி சாமியார் தீபாவை மிதக்க விடுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்து பூஜைகளை செய்கிறான். தீபா கார்த்திக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருப்பதால் பதற்றம் அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
 

Read more Photos on
click me!

Recommended Stories