1980களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் நளினி. ஒரே வருடத்தில் இவர் நடிப்பில் 24 படங்களெல்லாம் ரிலீஸ் ஆகி இருக்கின்றன. அந்த அளவுக்கு நிற்க கூட நேரமின்றி பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்தார் நளினி. இவர் நடிகரும், இயக்குனருமான ராமராஜனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அசிஸ்டண்ட் டைரக்ராக இருக்கும்போதில் இருந்தே நளினியை காதலித்து வந்துள்ளார் ந்ளினி.
24
Nalini, Ramarajan Marriage Photo
ஆரம்பத்தில் ராமராஜனின் காதலை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளார் நளினி. ஒரு கட்டத்தில் நளினியின் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமராஜனை அடித்திருக்கிறார்கள். அப்போது நமக்காக ஒருவர் இப்படி அடிவாங்குகிறாரே என ஸ்பார்க் வந்து நளினிக்கும் ராமராஜன் மீது காதல் ஏற்பட்டுவிட்டது. பின்னர் இவர்களை சேரவிடக்கூடாது என முடிவெடுத்து ஓராண்டுக்கு மலையாள படங்களில் மட்டும் நடிக்க வைத்திருக்கிறார்கள்.
எப்போது நளினி உடனே இருக்கும் அவரது தாய் ஒரு நாள் உறவினரின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக பெங்களூரு சென்றிருக்கிறார். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நளினியை காரில் தூக்கிச் சென்று தாலி கட்டி கல்யாணம் பண்ணி உள்ளார் ராமராஜன். அப்போது அவரது தாய், அவன் உன்னை வச்சி வாழமாட்டான், நீ திருப்பி வந்திருவனு சொல்லி மண்ணை வாரி போட்டுவிட்டு சென்றாராம். அவர் சொன்னபடியே இவர்களது திருமண வாழ்க்கை 13 ஆண்டுகளில் முடிவுக்கு வந்துவிட்டது.
44
Nalini
இந்த ஜோடிக்கு அருணா, அருண் என இரட்டை குழந்தைகளும் உள்ளன. ராமராஜானை விவகாரத்து செய்து பிரிந்த பின்னரும், அவரை இன்னும் காதலிப்பதாக நடிகை நளினி பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது : எனக்கு ராமராஜனை கணவராக தான் ரொம்ப புடிக்கும். அவருடன் வாழ்ந்தது பொற்காலம். நான் இப்போ தும்ம போறேன்னா அவருக்கு தெரியும். அந்த அளவுக்கு என்மீது பாசமாக இருப்பார். ஏழு ஜென்மம் எடுத்தாலும் எனக்கு திரும்ப அவர் தான் கணவரா வரணும்னு வேண்டுவேன்.
இப்படும் பேசிப்போம். அவருக்கு ஜோதிடம் மீது அதிக நம்பிக்கை உண்டு. குழந்தைகள் வளரும் போது அப்பா கூட இருக்காதுனு சொன்னதால, டைவர்ஸ் வாங்கி பிரிஞ்சிட்டோம். விவாகரத்து வாங்கும்போது கூட என் கணவர் என் கையை பிடிச்சிட்டு தான் இருந்தாரு என ராமராஜன் மீதுள்ள தனது தீராக்காதலை அந்த பேட்டியில் வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை நளினி.