MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Ethirneechal: குணசேகரன் கொட்டம் அடங்க போகுது! கப்புச்சிப்புனு 'எதிர்நீச்சலுக்கு' எண்டு கார்டு போடும் இயக்குனர்

Ethirneechal: குணசேகரன் கொட்டம் அடங்க போகுது! கப்புச்சிப்புனு 'எதிர்நீச்சலுக்கு' எண்டு கார்டு போடும் இயக்குனர்

'எதிர்நீச்சல்' சீரியலை, விரைவில் முடிவுக்கு கொண்டுவர இயக்குனர் திருச்செல்வம் முடிவு செய்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல்... இந்த தொடரை ரசித்துப் பார்க்கும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : May 29 2024, 09:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Ethirneechal

Ethirneechal

சன் டிவியில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல், பிரைம் டைம்மில் ஒளிபரப்பாகி வரும் தொடர் 'எதிர்நீச்சல்'. கோலங்கள் சீரியல் புகழ், இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வரும் இந்த சீரியல்களுக்கு, சீரியல் நடிகை ஸ்ரீவித்யா வசனம் எழுதி வருகிறார். 
 

27

ஆணாதிக்கம் கொண்ட மனிதர் ஒருவரை பற்றிய, உண்மைக் கதையை புனையப்பட்ட கதைக்களத்தோடு விறுவிறுப்பாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் முக்கிய வேடத்தில் மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி நீலகண்டன், ஹரிப்ரியா இசை, ஆகியோர் நடித்து வருகின்றனர்.

Ramarajan: ஏமாற்றத்தில் முடிந்த 12 வருட காத்திருப்பு! 'சாமானியன்' தோல்வியால் ராமராஜன் எடுத்த அதிரடி முடிவு!

37

மேலும் குணசேகரன் என்கிற வில்லத்தமான முரட்டு கதாபாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்து வந்த நிலையில், அவர் கடந்த ஆண்டு உயிரிழந்ததால் தற்போது அவருக்கு பதிலாக நடிகர் வேலா ராமமூர்த்தி நடித்து வருகிறார். இவரை தவிர சபரி பிரசாத், கமலேஷ், விபு ராமன், சத்யபிரியா, மோனிஷா விஜய், ரித்திக் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ரத்தம், திருச்செல்வம், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

47

குணசேகரன் திருமணம் செய்து கொள்ள ஆசை பட்ட பெண், இவர் படிக்காதவர் என்கிற காரணத்தை கூறி திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், படித்த பெண்களை டார்கெட் செய்து திருமணம் செய்து கொண்டது மட்டுமின்றி, தன்னுடைய தம்பிகளுக்கும் படித்த பெண்களை திருமணம் செய்து வைத்து அவர்களை வீட்டுக்குள்ளேயே முடக்கிப் போடும் ஆணாதிக்கம் கொண்டவர் குணசேகரன்.

சாமி பாடலை மிஞ்சிய ராஷ்மிக! அல்லு அர்ஜுனின் கியூட் ஆட்டத்தோடு வெளியான புஷ்பா 2 பட சூடான 'The Couple Song'!

57

அவருடைய பேச்சை ஒட்டு மொத்த குடும்பமும் கேட்டு நடக்கும் நிலையில், முதல் முறையாக அவருக்கு எதிராக நிற்கிறார் ஜனனி. எனவே குணசேகரனால்  பல்வேறு கஷ்டங்களுக்கு ஆளாக்கப்படுகிறார். ஒரு கட்டத்தில் கணவனை பிரிய முடிவு செய்யும் ஜனனியை, சமாதானம் செய்து மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருகிறார் அப்பத்தா. மீண்டும் குணசேகரன் வீட்டிற்குள் நுழையும் ஜனனி ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய சுய கௌரவத்தை புரிய வைத்து, பெண்கள் யாருக்கும் அடிமை இல்லை என்பதை உணர்த்தி தற்போது ஒட்டுமொத்த குடும்பத்தையும் மனம் மாறச் செய்துள்ளார்.

67

குறிப்பாக குணசேகரனின் வலது கை, இடது கையாக இருந்த அவருடைய தம்பிகள் ஞானம் மற்றும் கதிர் மனம் மாறி தங்களுடைய மனைவியின் பேச்சை கேட்க துவங்கியுள்ளனர். அதேபோல் குணசேகரன் தான் அவருடைய மகளை கடத்தியது என்கிற உண்மையும் தற்போது தெரிய வந்துள்ளது. ஜனனியுடன் கைகோர்த்து ஈஸ்வரி, ரேணுகா, மற்றும் நந்தினி ஆகியோர் ஊறுகாய் செய்யும் புதிய கம்பெனி ஒன்றையும் துவங்கி உள்ளனர்.

13 வயதில் ஹீரோயின்! இளம் நடிகருடன் காதல் தோல்வி? வாய்ப்புக்காக ஏங்கும் இந்த ஹீரோயின் யார் தெரியுமா?

77

தொடர்ந்து பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், தற்போது 700க்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் ஒட்டுமொத்த குடும்பமே குணசேகருக்கு எதிராக நிற்கும் நிலையில், விரைவில் குணசேகரின் கொட்டத்தை அடக்கி  சீரியலை வள வள என்று இருக்காமல் கூடிய விரைவிலேயே முடிவுக்கு கொண்டு வர இயக்குனர் திருசெல்வம் முடிவு செய்துள்ளதாகவும் அதன்படி இன்னும் ஓரிரு மாதத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. TRP-யில் டாப்பில் இருக்கும் இந்த சீரியல் முடிவுக்கு வரவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved